கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Nov 16, 2009

கடையநல்லூரில் ஆக்ஸிடண்ட்

இன்று  (16.11.2009) மாலை 6:30 மணியளவில் கடையநல்லூர் கல்வத்து நாயகம் தெரு கருத்த கலிபா குடும்பத்தைச் சார்ந்த ஹசன் துராப் மற்றும் அவருடைய உறவினர்கள் ஆட்டோவில் கடையநல்லூர் கால்நடை மருத்துவமனை அருகே வரும் போது ஆட்டோவின் பின் புறத்தில் பஸ் மோதியதால் பலத்த காயமடைந்தனர். இதில் ஹசன் துராப் அவர்களின் இரண்டு கால்களிலும் முறிவு ஏற்பட்டது. இவரது மனைவி ஜன்னத் மற்றும் இன்னும் இரண்டு பெண்களும் காயமடைந்தனர். ஹசன் துராப் அவர்களின் மகள் வயது (7) இடது கா ல் லேசான முறிவு ஏற்பட்டு கடையநல்லூர் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் பாளை மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் ஹசன் துராப் அவர்களும் அவரின் மனைவியும் மேல் சிகிச்சைக்காக பாளை ஐகிரவுண்ட் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவத்தை கேள்விப்பட்டதும் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் நகரச் செயலாளர் சின்ஷா மற்றும் ஜஃபருல்லாஹ், அப்துன்நாசிர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேவையான முதலுதவிகளைச் செய்தனர். இவர்களுடைய ஆரோக்கியத்திற்காக சகோதரர்கள் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இரவு 9 : 30 மணிக்கு ஹசன் துராப் அவர்களும் அவருடைய மனைவி ஜன்னத் மற்றும் குழந்தை மாஜிதா  ஆகியோர் பாளை ஐகிரவுண்ட் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பாளை தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் பாளை செய்யது அலி  அவர்களின் தலைமையில் சென்ற உதவிக் குழுவினர் தேவையான உதவிகளைச் செய்தனர். அவர்களின் உதவியைக் கண்டு மனம் நெகிழ்ந்த பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மாவட்டத் துணைத் தலைவர் ஜஃபருல்லாஹ் அவர்களை தொடர்பு கொண்டு தங்களது நன்றியை மனநிறைவோடு தெரிவித்தனர்.






செய்தி : அப்துந் நாசிர்

No comments: