கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Nov 24, 2009

மத்ஹபுகளும் ஆபாசங்களும்

மார்க்கத்தில் இல்லாததைப் புகுத்தும் மத்ஹபுச் சட்டங்கள்
ஒரு பெண்ணை அவளது மாமனார் ஆசையுடன் தொட்டால் கூட அவளை அவளது கணவரிடமிருந்து பிரித்து விட வேண்டும் என்று மத்ஹபு கூறுகின்றது. உடலைக் கூட தொட வேண்டாம்; முடியைத் தொட்டால் கூட திருமண உறவு முறிந்து விடும் என்று கூறுகின்றது. முடியைக் கூட தொட வேண்டாம்; முடிக்கு மேல் இருக்கும் முக்காட்டைத் தொட்டால் கூட கணவன் மனைவியைப் பிரித்து விட வேண்டும் என்று மத்ஹபுச் சட்டங்கள் கூறுகின்றன. ஒரு பெண்ணின் மர்ம உறுப்பை அவளது மாமனார் பார்த்தாலும் திருமண உறவு முறிந்து விடும் என்று மத்ஹபு கூறுகின்றது. நேரடியாகக் கூட பார்க்க வேண்டாம்; கண்ணாடியிலோ, தண்ணீரிலோ தெரியும் அவளது மர்ம உறுப்பை மாமனார் பார்த்தால் கூட கணவன், மனைவிக்கு இடையேயுள்ள திருமண உறவு முறிந்து விடும் என்றும் மத்ஹபுச் சட்டங்கள் கூறுகின்றன. நிகாஹ் என்ற வார்த்தைக்கு, திருமணம் என்று மட்டும் பொருள் இல்லை; உடலுறவு என்ற பொருளும் உண்டு; எனவே தான் இவ்வாறு தீர்ப்பளித்தோம் என்று விளக்கம் அளித்தவர்கள் மத்ஹபுகளின் இந்தக் கே­க்கூத்தான சட்டங்களுக்கு என்ன விளக்கம் அளிக்கப் போகின்றார்கள்? மத்ஹபுகளிலுள்ள இது போன்ற கிறுக்குத்தனமான சட்டங்களில் சிலவற்றைப் பார்ப்போம். 

முடியைத் தொட்டாலும் ஏற்படும் திருமணத் தடை!
இச்சையுடன் ஒரு பெண், ஓர் ஆணைத் தொட்டால், தொட்டவளின் தாயும், மகளும் அவனுக்குத் தடையாகி விடுவர். (அதாவது அவ்விருவரையும் அவன் திருமணம் முடிப்பது தடை செய்யப்பட்டு விட்டது)
நூல்: ஹிதாயா, பாகம்: 1, பக்கம்: 192
(தான் மணமுடித்த பெண்ணின் தாயை (மாமியாரை) ஒருவர் திருமணம் செய்வது தடையாகும் என்ற) திருமணச் சட்டத்தின் படி தன்னால் விபச்சாரம் செய்யப்பட்ட பெண்ணின் தாயைத் திருமணம் முடிப்பது இவனுக்குத் தடையாகும். இவன் இச்சையுடன் தொட்ட பெண்ணின் தாயை இவன் திருமணம் முடிப்பதற்குத் தடை! அவன் தொட்ட பகுதி உஷ்ணத்தைத் தடுக்காத திரையுடன் கூடிய தலையின் ஒரு முடியாக இருந்தாலும் சரியே! திருமணம் முடிக்கத் தடை தான்! அவனைத் தொட்டு விட்ட பெண்ணின் தாயையும் அவன் திருமணம் முடிப்பதற்குத் தடை! அவனது ஆணுறுப்பைப் பார்த்தவளின் தாயும் அவனுக்குத் தடை! அவன் எவளது வட்ட உள்ளுறுப்பைப் பார்த்தானோ அவளது தாயும் இவனுக்குத் தடை! அவளது உறுப்பை அவன் கண்ணாடியிலோ அல்லது அவள் தண்ணீரில் நிற்கும் போது பார்த்தாலும் சரி! அவளது தாய் அவனுக்குத் தடை தான். மேற்கண்ட பெண்ணின் தாய் அவனுக்குத் தடையானது போல், அவளது மகளும் அவனுக்குத் திருமணம் முடிக்கத் தடை!
நூல்: துர்ருல் முக்தார் பாகம் 3, பக்கம் 32
முடியைத் தொட்டாலும் திருமணத் தடை ஏற்படும் என்று திருக்குர்ஆனின் எந்த வசனத்தில் உள்ளது? எந்த ஹதீஸி­ருந்து இந்தச் சட்டத்தை எடுத்தார்கள்? மத்ஹபுக்கு வக்காலத்து வாங்கும் உலமாக்கள் பதில் சொல்வார்களா?
மாதத்தில் மூன்று நாள் குடும்பக் கட்டுப்பாடு
மாதத்தில் முதல் நாள் இரவிலும் கடைசி இரவிலும் மாதத்தின் நடு இரவிலும் உடலுறவு கொள்வது வெறுப்பிற்குரியதாகும். காரணம் இந்நாட்களில் உடலுறவு கொள்ளும் போது ஷைத்தான் விஜயம் செய்கின்றான் என்று இஹ்யாவில் வருவதாக முக்னி என்ற நூ­ல் பதிவாகியுள்ளது.
நூல்: இஆனா பாகம் 3, பக்கம் 273
மாதத்தில் சில குறிப்பிட்ட நாட்களில் இல்லறத்தில் ஈடுபடக் கூடாது என்று இந்த மத்ஹபுச் சட்டம் கூறுகின்றது. ஆனால் அல்லாஹ் என்ன கூறுகின்றான் என்று பாருங்கள்.
மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். அது ஒரு தொல்லை. எனவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள்! அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள்! அவர்கள் தூய்மையாகி விட்டால் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டவாறு அவர்களிடம் செல்லுங்கள்! திருந்திக் கொள்வோரை அல்லாஹ் விரும்புகிறான். தூய்மையாக இருப்போரையும் விரும்புகிறான் எனக் கூறுவீராக!
(அல்குர்ஆன் 2:222)
மாதவிலக்கு ஏற்படும் நாட்களைத் தவிர மற்ற நாட்களில் எப்போது வேண்டுமானாலும் இல்லறத்தில் ஈடுபடலாம் என்று அல்லாஹ் கூறுகின்றான். ஆனால் இந்த நூலாசிரியர் தனக்கு ஏதோ வஹீ வந்தது போன்று தன் இஷ்டத்திற்கு சில நாட்களைக் குறிப்பிட்டு இல்லறத்தில் ஈடுபடக் கூடாது என்று தடை விதிக்கின்றார்.
அல்லாஹ்வோ, அவனுடைய தூதரோ தடுக்காத ஒன்றை, இவர்கள் தங்களது மனோ இச்சைப்படி தடை செய்கின்றனர். இது போன்று ஆயிரம் நிபந்தனைகளைக் கூறினாலும் அவை அனைத்தும் வீணானவையே என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
''அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத நிபந்தனைகளைக் கூறுபவர்களுக்கு என்ன நேர்ந்தது? யார் அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத நிபந்தனையை விதிக்கின்றார்களோ அவர்களுடைய அந்த நிபந்தனை வீணானது, (செல்லாது) அவர்கள் நூறு நிபந்தனைகளை விதித்தாலும் சரியே! அல்லாஹ்வின் நிபந்தனை தான் நிறைவேற்றத் தக்கதும் உறுதியானதும் (கட்டுப்படுத்தும் வ­மையுடையதும்) ஆகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரீ 2155
மேலும் அல்லாஹ் தடை செய்யாதவற்றைத் தங்கள் இஷ்டத்திற்குத் தடை செய்வதை அல்லாஹ் மிகக் கடுமையாகக் கண்டிக்கின்றான்.
''இது அனுமதிக்கப்பட்டது; இது விலக்கப்பட்டது'' என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டியோர் வெற்றி பெற மாட்டார்கள்.
(அல்குர்ஆன் 16:116)
''அல்லாஹ்வே இதைத் தடை செய்தான் என சாட்சியமளிக்கும் உங்கள் சாட்சிகளைக் கொண்டு வாருங்கள்!'''என்று கேட்பீராக! அவர்கள் (பொய்யாக) சாட்சியமளித்தால் அவர்களுடன் சேர்ந்து நீரும் சாட்சியமளிக்காதீர்! நமது வசனங்களைப் பொய்யெனக் கருதி, மறுமையை நம்பாதோரின் மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர்! அவர்கள் தம் இறைவனுக்கு (மற்றவர்களை) சமமாக்குகின்றனர்.
(அல்குர்ஆன் 6:150)
இன்ஷா அல்லாஹ்  தொடரும்….

No comments: