கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Dec 7, 2009

தஃவா மேம்பாடு குறித்த கலந்தாலோசனை

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

தஃவா மேம்பாடு குறித்த கலந்தாலோசனை
அஸ்ஸலாமு அலைக்கும்

            அல்லாஹ்வின் மகத்தான அருளால் கடையநல்லுர் பகுதியில் தஃவா மேம்பாடு குறித்த கலந்தாலோசனை சகோதரர் SSU ஸைபுல்லாஹ் பைஜி தலைமையில்  07.12.2009 அன்று சரியாக 11 மணிக்கு தொடங்கி லுஹர் தொழுகை கடந்தும் 2:00 மணிவரை நடைபெற்றது.






            இதில் கடையநல்லூர் TNTJ நிர்வாகிகள்,பள்ளிவாசல் நிர்வாகிகள்சகோதரர்கள் பஷிர் உமரி,அப்துந் நாசர், யூசுப் பைஜி உட்பட வளைகுடா பகுதியில் வசிக்கின்றவர்கள் மற்றும் ஆர்வமுள்ள பல சகோதரர்கள் கலந்து கொண்டனர்.






இதில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய முடிவுகள்
  • Ø மூன்று மாததிற்கு ஒரு முறை பப்ளிக் மீட்டிங் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • Ø  மாதத்திற்கு இரண்டு முறை தெருமுனைப் பிரச்சாரம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • Ø  பிரசுரம் வெளியீடு.இது மாதம் ஒரு முறை.முக்கிய நிகழ்வுகள் குறித்து வழிப்புணர்வு!   (உ.ம். தர்ஹா,மீலாத் மற்றும் சட்ட திட்டங்கள்)இதற்கு  UAE பொருப்பேற்றுள்ளது.
  • Ø  நம் நிர்வாகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் வாரம் இருமுறை வகுப்புகள் நடத்தவும்,இதை மக்களுக்கு அறிவிப்பு செய்ய வேண்டும்.முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • Ø  முபாரக்,அக்ஸா.மர்யம் ஆகிய பள்ளிவாசலில் வைத்து வருடத்தில் இரண்டு மாதம் தோ்வு செய்து மொத்தம் 16 வகுப்புகள் நடத்தி ( செமினார்)தேர்வுகள் எழுதக் கூடியவர்களுக்கு  இறுதியில் பரிசுகள் வழங்குவது.பரிசுகளின் மொத்த செலவு 3000 ரூபாய் இதை ஸ்பான்சர் மூலமாக வழங்குவது.முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • Ø  இது போன்று பெண்களுக்கும் நடத்துவது.முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • Ø  இரண்டு மாததிற்கு ஒரு முறை பெண்களுக்கு பயான் நடத்துவது.
  • Ø  ஏரியா தோறும் திண்ணைகளில் மக்தப் மத்ரஸா தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • Ø  KCN மார்கப் பிரச்சாரம் ஒளிபரப்ப முடிவு செய்து. இது UAE  ஆலோசணைக்கு விடப்பட்டுள்ளது.
  • Ø  ஆர்வமுள்ள இளைஞர்களை கண்டறியும் பொறுப்பு சகோ.அப்துந் நாசர் மற்றும் சகோ.அப்துல் அஜிஸ் – அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட்து.
  • மேலே செல்லப்பட்ட அனைத்து நிகழ்ச்சிகளின் REPORT ம் அந்தந்த நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு வளைகுடாவில் உள்ள நிர்வாகிகளுக்கு தெரிய படுத்த வெண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.
  • Ø  இறுதியாக 20.12.2009 அன்று தர்பியா ஒன்று நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.




தஃவா கமிட்டி
தஃவா பொருப்பு தலைவராக s s u ஸைபுல்லாஹ் நியமிக்கப்பட்டுள்ளார். 
தஃவா கமிட்டி உறுப்பினர்களாக

  • Ø கடையநல்லூர் நகர தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள்
  • Ø ஒவ்வொரு தவ்ஹீத் பள்ளி நிர்வாகத்திலிருந்து தலா இரண்டு நபர்கள்
  • Ø கொள்கைப் பிடிப்புள்ள இளைஞர்கள். ஆகியோர் தேர்ந்தெடுக்கப்படுவர்
  • கடையநல்லூரி உள்ள தவ்ஹீத் ஆலிம்களும் இடம்பெறுவர்.




No comments: