கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Apr 25, 2010

ரியாத் மண்டல கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் ஆலோசனைக் கூட்டம்.

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இன்ஷா அல்லாஹ் வருகின்ற ஜூலை 4 ல் நடைபெறவிருக்கின்ற ஒடுக்கப் பட்டோரின் உரிமை மாநாடு சம்பந்தமால ரியாத் மண்டல் கடையநல்லூர் தவ்ஹீத் செயலகத்தில் 23.04.2010 வெள்ளிக் கிழமை அன்று மஃரீப் தொழுகைப் பிறகு சகோ. ஏ.எஸ் முகைதீன் தலமையில் ஆலோசனக் கூட்டம் நடைபெற்றது.
 இதில் மாநிலப் பேச்சாளர் சகோ.அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் மாநாட்டின் அவசியம் பற்றியும் மாநாட்டுக் குழு தலைவர் சகோ.ஷைபுல்லாஹ் ஹாஜா அவர்கள் நமது ஜமாஅத்தின் பணிகள் பற்றியும், அதற்கு வெளிநாட்டில் வசிக்கும் நம் சகோதரர்கள் எவ்வாறு ஒத்துழைக்க வேண்டும் என்பது பற்றியும் தொலைபேசி மூலமாக உரை நிகழ்த்தினார்கள். இதில் கடையநல்லூர் தவ்ஹீத் சகோதரர்கள் அதிகமானோர் கலந்து கொண்டனர். இறுதியில் துவாவுடன் இனிதே முடிவுற்றது.அல்ஹம்துலில்லாஹ்.

அதில் எடுக்கப்பட்டத் தீர்மாணங்கள்

·        இன்ஷா அல்லாஹ் ஜூலை 4 நடைபெற உள்ள மாநாடு வெற்றியடைய முதலில் அல்லாஹ்விடம் ஒவ்வொரு தொழுகையிலும் தூஆ செய்ய வேண்டும்.
·        இங்குள்ள கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் குறைந்த பட்சம் நம்மூரிலிருந்து ஒருவர் மாநாட்டிற்கு சென்று வர ஆகும் செலவை கட்டாயம் வசூலிக்க வேண்டும்.
·        ரியாத் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இரண்டு சொகுசு பேருந்துகளுக்கு உண்டான தொகையை முதல் கட்டமாக வழங்குவது.
·        நமதூரில் மாநாடு பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த தொருமுனை பிரச்சாரம், பொதுக்கூட்டம், ஏற்பாடு செய்ய வேண்டும். (பொதுக் கூட்டத்திற்கான செலவை ரியாத் மண்டலம் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் பொருப்பேற்றுக் கொள்ளும்)
·        நமதூரில் துவங்க இருக்கிண்ற நஜாஹ் நர்சரிக்கு பங்குகள் சேர்க்கை நடைபெற்றது.
·        ரியாத்- ல் குர்ஆனை கற்றுக் கொள்ள விரும்புவர்கள் வெள்ளி தோறும் அஸர் தொழுகைகுப் பிறகு தவ்ஹீத் செயலகத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப் பட்டு. மேற்கண்ட தீர்மானங்கள் நிரைவேற்றப் பட்டன.













ரியாத் மண்டலம் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத்

பத்தா ரியாத்.

No comments: