திருநெல்வேலி,ஏப்.27: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் திருநெல்வேலி மாவட்டத்தில் கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
இது குறித்து அதன் மாவட்டச் செயலர் கே.ஏ. செய்யதலி வெளியிட்ட அறிக்கை: கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்கும் விதமாக, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இஸ்லாமிய நல்லொழுக்க பயிற்சி முகாம் நடத்த ஏற்பாடு செய்துள்ளது.
இந்த பயிற்சி முகாம், மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசல், தென்காசி மஸ்ஜித் தவ்ஹீத் பள்ளிவாசல், கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் பள்ளிவாசல் ஆகிய 3 இடங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளன.
முகாம் மே 1 ஆம் தேதி தொடங்கி 15 ஆம் தேதி வரை நடைபெறும். முகாமில் தகுதிவாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு மாணவர்களுக்கு இஸ்லாமிய அடிப்படைக் கோட்பாடுகள், ஒழுக்க நெறிமுறைகள், தொழுகைப் பயிற்சி, பேச்சுப் பயிற்சி, பிரார்த்தனைகள் கற்றுக் கொடுக்கப்படும் என்றார் செய்யதலி.
நன்றி: தினமணி
http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Edition-Thirunelveli&artid=233729&SectionID=139&MainSectionID=139&SEO=&Title=தவ்ஹீத்%20ஜமாஅத்%20சார்பில்%20கோடைக்கால%20பயிற்சி%20முகாம்
No comments:
Post a Comment