1999 ல் தவ்ஹீத்வாதிகள் சென்னை கடற்கரையில் கூட்டிய வாழ்வுரிமை மாநாடு ஆட்சியாளர்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினரிடம் இஸ்லாமிய சமுதாயத்தின் இடஒதுக்கீடு அவசியத்தை உணர்த்தியது. அரசியல் கட்சிகளின் 2004 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் இடஒதுக்கீடு இடம்பிடிக்க இம்மாநாடே வழிகோலியது.
தவ்ஹீதுவாதிகள் நடத்திய 2004 தஞ்சைப் பேரணி அரசியல் கட்சிகள் ஆட்சியாளர்கள் கவனத்தை மேலும் ஈர்த்தது.
குடந்தையை குலுக்கிய டிஎன்டிஜே வின் இடஒதுக்கீடு கோரிக்கைப் பேரணி அப்போதைய அதிமுக அரசையே ஆணையம் அமைக்க வைத்தது.
டிஎன்டிஜே வின் தொடர் முழக்க தர்ணா பேரணி திமுக அரசின் மவுனத்தையும் மரண உறக்கத்தையும் கலைத்தது.
டிஎன்டிஜே நடத்திய நாடுதழுவிய சிறைநிரப்பும் போராட்டம் மாநில அரசை மூன்றரை சதவிகித இடஒதுக்கீட்டை சட்டமாக்கச் செய்தது.
இடஒதுக்கீடு பெற்றுத் தருவதில் பலசோதனைகளைக் கடந்து சாதனை படைத்த டிஎன்டிஜே போராட்ட களத்தில் போர்க்குணத்துடன் நின்று தமிழகத்தில் இடஒதுக்கீட்டை வென்று தந்தது.
இப்பொழுது நாடுதழுவிய இட ஒதிக்கீடு கோரிக்கைக்கான நேரம் !!
இன்றைய தேர்தலை குறியாக கொள்ளாமல் நாளைய தலைமுறையை குறியாகவும் வெறியாகவும் கொண்ட டிஎன்டிஜே, மத்தியில் ரங்கனாத் மிஸ்ரா பரிந்துரைப் படி பத்து சதவிகிதம் இட ஒதுக்கீடு பெற்றுத் தர மீண்டும் படையெடுக்கிறது!!.
கட்சிகளை வளர்ப்பதற்காக கூட்டம் கூட்டுபவர்கள் மத்தியில் சமுதாய நலனுக்காக ஒரு மாபெரும் கூட்டம் !!
ஆட்சியாளர்களை திரும்பிப்பார்க்க வைப்பதே இதன் ஒரே நோக்கம்.
ஒரு தினம் மட்டுமேனும் இயக்க வேறுபாடுகளை மறந்து நாம் ஒன்றுபட்டால், நாளைய நமது சந்ததியினர் பெரும் சுகம் அடைவார்கள் என்ற நம்பிக்கையை இந்த மாநாடு நிச்சயம் அளிக்கும், இன்ஷா அல்லாஹ். !!
ஒன்றுபடுவோம், வரும் ஜூலை நான்கில் !
5 comments:
உங்கள் கட்சியை வளர்பதர்ககத்தான் இந்த மாநாடு . இது முஸ்லிம்களுக்காக இல்லை . அவ்வாறு இருந்திருந்தால் உங்கள் கோசங்கள் பின் வருமாறு இருந்திருக்காது
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் எத்திசைத் திரும்பினாலும் · போராட்டம் இது போராட்டம்,
· TNTJ நடத்தும் போராட்டம்,
· ஓய மாட்டோம் உறங்க மாட்டோம்,
· இடஒதுக்கீடுப் பெறும் வரை,
· ஓய மாட்டோம் உறங்க மாட்டோம்,
மேற்கண்ட முழக்கத்தில் TNTJ பதிலாக முஸ்லிகள் போராட்டம் என்று போடிருந்தால் நன்றாக இருக்கும். ஏனென்றால் இது முஸ்லிம்களுக்காக நடத்தப்படும் போராட்டம் .
இந்த கோசத்தை வைத்து பார்த்தல் TNTJ வினர் முஸ்லிம்களுக்காக போராட்டம் நடத்துவது போல் இல்லை . அவர்கள் அமைப்பை வளர்த்து பிரபலியபடுதுவது போல் உள்ளது.
TNTJ அரசியல் எதிர்காலத்துக்கு எனது வாழ்த்துக்கள்
Faisal.A
சகோதரர் ஃபைசல் அவர்களுக்கு..
அஸ்ஸலாமு அலைக்கும்…
நலம்…. நலம் பல விளைய பிரார்த்திக்கிறேன்.
முதலில் TNTJ அரசியல் கட்சி அல்ல என்பதும்,இது வரை தேர்தலில் போட்டியிட்டதும் இல்லை,அரசுப் பதவிகளை பெற்றதும் இல்லை என்பதும் தங்களுக்கு தெரிந்ததே. அவ்வாறிருந்தும்
// உங்கள் கட்சியை வளர்பதர்ககத்தான் // என்று எதனை அடிப்படையாக வைத்து கூறுகின்றீர்கள்.
//முஸ்லிம்களுக்காக போராட்டம் நடத்துவது போல் இல்லை //
இந்த இடஒதுக்கிட்டு கோரிக்கைக்காக பல வீரியமான போராட்டங்களை(சிறை நிரப்பும் போராட்டம் உட்பட) தமிழகத்தில் நடத்திய ஒரே அமைப்பு TNTJ. அதன் காரணமாக அல்லாஹ்வின் அருளால் 3.5% இடஒதுக்கிடு பெற்று இன்று நம் சமுதாயம் அதை அனுபவித்தும் வருகிறது. தாங்கள் கூறுவது போல் அரசியல் எதிர்காலத்தை நோக்கி பயணிக்கும் அமைப்பாக இருந்தால் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் சில சமுதாயக் கட்சிகள் போட்டியிட்டது போல் தேர்தலில் போட்டியிட்டிருக்கும். ஆனால் தேர்தலில் ஒருகாலமும் போட்டியிடக் கூடாது என்பதை அடிப்படை விதியாக வகுத்துக் கொண்டு சமூக மற்றும் மார்க்கப் பணிகளில் ஈடுபட்டு வரும் மாபெரும் சமூக அரசியல் பேரியக்கம் என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
// TNTJ நடத்தும் போராட்டம், //
எந்த அமைப்பு ஒரு ஆர்பாட்டத்தையோ,போராட்டதையோ அறிவித்தாலும் அல்லது நடத்தினாலும் அவர்கள் முஸ்லிம்கள் என்று மட்டும் கூறுவதில்லை மாறாக தங்களின் அமைப்பையே முன்னிலைப்படுத்துகின்றனர். தங்களின் கோரிக்கை அரசாங்க ரீதியாக ஏற்கப்படுவதற்கும்,தங்கள் தரப்பு நியாயங்களை பிரகடனப்படுதுவதற்கும் தத்தமது அமைப்பின் பெயரை முன்னிலைபடுத்துவது சாதாரண ஒன்று.
இஸ்ஹாக், துபை
Ka.ishaq@gmail.com
தவ்ஹீத் ஜமாத்தின் வளர்ச்சியை கண்டு வயிற்றெரிச்சல் அடைந்த கூட்டத்தினரின் கூக்குரல் இது .
விமர்சனத்தை பதிவு செய்வதற்கு முன், ஒரு முறைக்கு இரண்டு முறை படித்துப்பார்த்து விட்டு பதிவு செய்யுங்கள்.
முஸ்லிம்களுக்கான போராட்டத்தை TNTJ அழைக்கிறது. யார் அழைக்கிறார்களோ, அவர்களது பெயரை தான் போட வேண்டும். கோரிக்கை TNTJ நிர்வாகிகளுக்கு மட்டும் உள்ள கோரிக்கை என்று அவர்கள் விளம்பாம் செய்யவில்லை . அவ்வாறு செய்திருந்தால் தான் , இது அனைத்து முஸ்லிம்களுக்கும் உண்டான கோரிக்கை தானே , இதை ஏன் TNTJ யினருக்கு மட்டும் என்று போட்டிருக்கிறார்கள் , அவர்கள் இயக்கத்தை வளர்க்கவே இவ்வாறு விளம்பரம் செய்கிறார்கள் என்ற உங்களது முட்டாள்தனமான வாதம் செல்லுபடியாகும் . .
ஆனால் இந்த மாநாடு , அனைத்து முஸ்லிம்களுக்குமான கோரிக்கை மாநாடு என்று தான் விளம்பரம் செய்திருக்கிறார்கள் . எந்த மாநாட்டிற்கும் ஒரு தலைமை இருக்க வேண்டும் . இந்த மாநாட்டை TNTJ தலைமை ஏற்கிறது என்ற வகையில் கோரிக்கைக்காக வாருங்கள் என்று அழைப்பு விடுக்கிறது .
ஆக, மாநாட்டை ஏற்ப்பாடு செய்து, அனைத்து முஸ்லிம்களையும் அழைப்பது அவர்கள் என்ற முறையில் அழைப்பது நாங்கள் தான் என்று போடுவதில் எந்த தவறும் இல்லை.
இன்னும் சொல்லப்போனால், இந்த இடத்தில் யார் அழைக்கிறார்கள் என்று சொல்வது அவசியமும் கூட. மற்ற மற்ற இயக்கங்கள் இது போன்ற கோரிக்கைக்காக ஒரு துரும்பையும் எடுத்துப்போடாத நிலையில், தங்களது சுயலாபதிற்க்காக பகட்டு விளம்பரம் செய்து இயக்கம் வளர்த்தர்களோ, அவர்களை நமது முஸ்லிம் சமூகம் நன்கு அடையாளம் கண்டுகொண்டது. அந்த வகையில், கோரிக்கையை வைப்பது யார், அழைப்பது யார் என்று கண்காணித்து அதன் பிறகு மாநாட்டிற்கு வருகை தரும் அளவிற்கு முஸ்லிம் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்ப்பட்டிருக்கிறது. எவர்கள் நேர்மையாலரோ, அவர்களது அழைப்பில் உண்மை இருக்கும்., அல்லாஹ் அதில் தான் வெற்றியை தருவான். எவர்கள் தங்கள் சுயனலதிர்க்காகவும், கட்சி வளர்த்து ஆட்சியை பிடிப்பதற்காகவும் போராட்டங்கள் நடத்தினார்களோ, அவர்களது இறுதி நிலை தோல்விதான் என்பதை மக்கள் புரிந்துள்ள காரணத்தால், பொது மக்கள் அனைவருக்குமான இந்த கோரிக்கையை மாநாட்டை ஏற்பாடு செய்திருப்பது யார் என்பதை சொல்ல வேண்டிய தேவை இருக்கிறது..
சமுதாய நலனுக்குப் பாடுபடுவதாகத் தானே இந்த ஆர்ப்பாட்டம். சமுதாயமே இந்த ஏற்பாட்டைச் செய்வதாக அறிவிக்கட்டுமே பார்க்கலாம். தங்கள் ததஜ கொடியைத் தவிர்த்து, தமிழ்ச்செம்மொழி மாநாட்டிற்காகப் பிரத்தியேகமாக பொதுவான கொடி தயாரித்துக் கட்டியது போல், முழுச் சமுதாயத்தையும் பிரதிபலிக்கும் பொதுவான ஒரு கொடியைக் கட்டட்டுமே பார்க்கலாம். ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தையும் அழைப்பது போல், அந்த சமுதாயத் தலைவர்களையும் அழைத்து மேடையேற்றி அவர்களும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கட்டும் பார்க்கலாம்.
இதற்கு அழகிய முன்மாதிரியாகத் தமிழக முதல்வர் மாண்புமிகு கலைஞர் கருணாநிதி திகழ்கிறார். தமிழ் பேசும் மக்களின் உரிமைகளைக் கட்டிக்காக்க, செம்மொழித் தமிழை மேலோங்கச் செய்ய கோவையில் நடத்திய உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டைக் கட்சி சார்பு இல்லாமலும், தனது தி.மு.க. கட்சியின் ஒரேயொரு கொடியையும் பறக்க விடாமலும், கட்சி சார்பில்லாமல் தமிழ்ப் பேசும் அனைத்துத் தலைவர்களையும், மேடையேற்றி பேசவைத்ததையும் முன்மாதிரியாகக் கொள்ளவேண்டும். இதற்காக முதல்வரைப் பாராட்டலாம்.
முன்வருவாரா ததஜ தலைவர்? அப்படி ததஜ கொடியை மக்கள் கண்ணிலும் காட்டாமல், சமுதாயத் தலைவர்கள் அனைவரையும் கட்சி, இயக்க சார்பில்லாமல், சமுதாய நலனை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு அனைவரையும் பேசுவதற்கு அனுமதிப்பாரா? இறை நம்பிக்கையோ, மறுமை நம்பிக்கையோ இல்லாத நாத்திகர் தமிழக முதல்வர் கடைபிடித்த அழகிய முன்மாதிரியை இறை நம்பிக்கையும், மறுமை நம்பிக்கையும் இருப்பதாகச் சொல்லும் ததஜ தலைவரும், இயக்கத்தினரும் கடைபிடிக்க முன்வருவார்களா? பொறுத்திருந்து பார்ப்போம். கால அவகாசம் இல்லை என்று பசப்பவும் முடியாது. அந்த அளவு தொடர்பு வசதிகள் நிறைந்த காலம் இது.
ததஜவை விளம்பரப்படுத்த தயாரித்து வைத்துள்ள இயக்கக் கொடிகள், இதர விளம்பரச் சாதனங்கள், தண்ணீர் பாக்கெட் முதல் அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு, தனது ததஜ இயக்கத்தின் விளம்பரத்தைக் குறிக்கோளாகக் கொள்ளாமல் சமுதாய நலனை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இப்பேரணியையும், மாநாட்டையும் நடத்த முன்வருவார்களா ததஜ தலைமையும், நிர்வாகிகளும், உறுப்பினர்களும்? அதுவே அவர்கள் சமுதாய நலனில் அக்கறை உள்ளவர்கள் என்பதை நிரூபிக்கும். இல்லை என்றால்……!
அப்படித் தங்கள் ததஜ நலனைப் புறக்கணித்து சமுதாய நலனைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட முன்வந்தால் மட்டுமே. அவர்கள் சமுதாய நலன் கருதி இந்த முயற்சியைச் செய்வதாகக் கூறுவதை மக்கள் ஏற்க முடியும். ஆனால் அவர்களின் செயல்பாடுகளும் அறிவிப்புகளும் அவர்களின் சொந்த நலனைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதையே வெளிப்படுத்துகின்றன. இல்லை என்றால் ஒரு லட்சம் மக்கள் தானும் கூட முடியாத தீவுத்திடலில் 15 லட்சம் மக்கள் கூடப்போவதாகப் பொய்யுரைக்க முடியுமா? தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் நீண்ட காலம் அனைத்து ஊடகங்களிலலும் தொடர்ந்து விளம்பரங்கள் செய்தும், கடும் முயற்சிகள் எடுத்தும், சுமார் 500 கோடிகள் செலவு செய்தும் அனைத்துக் கல்விக் கூடகங்களுக்கும் 5 நாட்கள் விடுமுறை அளித்தும் பெருத்த ஆரவாரத்துடன் தமிழக அரசே முனைந்து செயல்பட்ட கோவை மாநாட்டிற்கு இத்தனை இலட்சம் மக்கள் கூடுவார்கள் என அறிவிப்பு வெளியிடவில்லை. சுமார் ஆறுகோடி தமிழர்களைக் கொண்ட தமிழ் நாட்டில், கோவையில் கூடியதோ 10 லட்சத்திற்கும் உள்ளேதான். இந்த நிலையில் ஒரு கோடி முஸ்லிம்கள் கூட இல்லாத தமிழ்நாட்டில் 15 லட்சம் முஸ்லிம்கள் தீவுத்திடலில் கூடுவார்கள் என நாக்கூசாமல் தொடர்ந்து அறிவிப்புச்செய்கிறவர்களை உண்மை பேசுகிறவர்கள் என நம்ப முடியுமா? அதையும் அப்படியே கண்மூடி நம்பி பரப்பித் திரியும் ததஜவினருக்குச் சுய சிந்தனை இருப்பதாக நம்ப முடியுமா?
சகோதரர்கள் அனைவருக்கும் என் அஸ்ஸலாமு அழைக்கும்
இஸ்ஹாக் அவர்களுக்கு
வலையில் உலவிக்கொண்டு இருக்கும் பொழுது படித்ததில் பிடித்திருந்ததால் என் கருத்தை பதிக்கிறேன்
//முதலில் TNTJ அரசியல் கட்சி அல்ல என்பதும்,இது வரை தேர்தலில் போட்டியிட்டதும் இல்லை,அரசுப் பதவிகளை பெற்றதும் இல்லை என்பதும் தங்களுக்கு தெரிந்ததே. அவ்வாறிருந்தும் .///
அரசியல் என்றால் என்ன அல்லது எவ்வளவு என்கிற அளவுகோலை உங்களால் சொல்ல முடியுமா.நாங்கள் தேர்தலில் நிற்கவில்லை அரசு பதவிகளில் அமரவில்லை என்பதால் மட்டும் அரசியலில் இல்லை என்று சொல்லிவிட முடியுமா.
தவ்ஹீத் மட்டுமே எங்கள் குறிக்கோள் மற்றவைகளுக்கு இடம் இல்லை என்று கூறித்தானே தமுமுகவை விட்டு வெளியே வந்தோம்.பிறகு ஏன் ஒவ்வவரு தேர்தலிலும் ஒவ்வவரு அரசியல் கட்சிகளை ஆதரித்து மேடை போட்டு ஓட்டு சேகரிக்க வேண்டும்.
மாமாகவை வீழ்த்தியே தீருவோம் என்று கூறவேண்டும்.தேர்தலில் நிற்காத ஒருவர், தேர்தலில் நிற்கும் நபரை எப்படி தோக்கடிக்க முடியும்.அப்படியென்றால் நேரடியாகவோ மறைமுகமாகவோ நீங்கள் அரசியல் செய்கிறீர்கள் .
தவ்ஹீத் பரப்புவது மட்டும் தான் எங்கள் வேலை மற்றவைகளுக்கு நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம்,அரசியல் என்று வந்துவிட்டால் பல விசயங்களில் தவ்ஹீதில் விட்டு கொடுக்க நேரிடும் ,அது நமக்கு சரிவராது என்று தானே தமுமுகவை விட்டு வரும்பொழுது கூறிய குற்றச்சாட்டுக்கள்,பிறகு ஏன் இஸ்லாமிர்களுக்காக இட ஒதுக்கீடுக்காக உரிமை மாநாடு ,தேர்தலுக்காக குடந்தை(கும்பகோணம்) மாநாடு.தவ்ஹீத்வாதிகுளுக்கு இறைநிரகரிபாலறன கலைஞரிடம் என்ன வேலை ,பரமன் (யூதன் )ஜெயளைல்தாவிடம் என்ன வேலை ,மன்மோகன் சிங்கிடம் என்ன வேலை,
மற்ற அரசியல் கட்சிக்காக தேர்தலில் ஓட்டு சேகரிப்பதும்,ஒரு தேர்தலில் ஜெயலலிதவை ஆதரித்து கலைஞரை திட்டுவதும் அடுத்த தேர்தலில் ஜெயலளித்தாவை திட்டுவதும் அதாவது மாறிமாறி பேசுவது எப்படி தவ்ஹீத்வாதியின் செயலக இருக்க முடியும் .
////இந்த இடஒதுக்கிட்டு கோரிக்கைக்காக பல வீரியமான போராட்டங்களை(சிறை நிரப்பும் போராட்டம் உட்பட) தமிழகத்தில் நடத்திய ஒரே அமைப்பு TNTJ.////
அப்போ தமுமுக்க நடத்திய வாழ்வுரிமை மாநாடு என்ன வென்று சொல்லுவீர்களா? .சொற்களில் சுவை வேண்டும் என்பதற்காக குரானையும் மறுமையும் நம்பும் நாம் உண்மையை மறைக்க கூடாது .
/// அதன் காரணமாக அல்லாஹ்வின் அருளால் 3.5% இடஒதுக்கிடு பெற்று இன்று நம் சமுதாயம் அதை அனுபவித்தும் வருகிறது////
மறுமையை மறந்துவிட வேண்டாம் .இட ஒதுகீட அளித்த பொழுது நீங்கள் அதிமுக விடம் இருந்தீர்கள்.மேலும் கொடுக்கப்பட்ட இடஒதுக்கீடை பற்றி பல குறைகள் கூறியுள்ளீர்கள்.வேண்டாம் சகோதர நரக நெருப்புக்கு அஞ்சிக்கொள்ளுங்கள்.
அன்று டெல்ஹியில் தமுமுக முஸ்லிம்களுக்காக இடஒதுக்கீடு கேட்டு,இந்திய முஸ்லிம் தலைவர்களை அழைத்து பேரணி நடத்தியது சரியா.... இல்லை , " தவ்ஹீத் பரப்புவது மட்டும் தான் எங்கள் வேலை மற்றவைகளுக்கு நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம்,அரசியல் என்று வந்துவிட்டால் பல விசயங்களில் தவ்ஹீதில் விட்டு கொடுக்க நேரிடும் " என்று கூறிய நீங்கள் இன்று கேவலம் மலம் ஜாலம் கழிக்கும் மனிதன் பிரதமரை சந்திக்க வேண்டும் என்பதற்காக கபுறு வணங்கி ஹாருன்னை மேடை ஏத்துவது ஏன்?
தவ்ஹீத்வாதிகளான மற்றும் இஸ்லாமிய மக்கள் பேரியக்கங்களின் தலைவர்களான கமால் மதானி ,ஹைதரலி ,பாக்கர் ,ஜவஹிருல்ல போன்றவர்களை அழைக்காமல் ,கபுறு வணங்கி ஹாருன்னை அழைத்தது ஏன் ?
ஒட்டு மொத்த முஸ்லிம்களுக்காக என்று பெருந்தன்மையாக கூறும் உங்களிடம் சகோதர இயக்க தலைவர்களையும் ஏன் அழைக்க மனம் வரவில்லை.சொந்த சகோதரனிடம் மல்லுக்கு நிற்கும் நீங்கள் எப்படி சமுதாயத்துக்காக போராடுகிறோம் என்று கூறுகிறீர்கள் ?
முஸ்லிம்கள் மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருக்க கூடாது என்று குரான் கூறுகிறது அப்படியென்றால் ஏன் பீஜே அவர்கள் ,கமால் மதானி ,ஹைதரலி ,பாக்கர் ,ஜவஹிருல்ல அவர்களிடம் பேசுவது இல்லை .தவ்ஹீத் எனபது மற்றவர்களுக்கு தான?
எந்த விதத்திலும் யாரையும் புண்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் நான் இத கருத்தை பதியவில்லை.
இஸ்மி - மன்கூல் -பர்-துபாய்
எனக்கு ஜிமெயில் இல்லை தவறாக நினைக்க வேண்டாம்.
Post a Comment