கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

May 30, 2010

மாநிலத்தில் முதலிடம் பிடித்த ஜாஸ்மீன் சிறப்புப் பேட்டி!




பிள்ளைகளை படிக்கவைக்க வேண்டும் என்றாலே ஆயிரகணக்கில், லட்ச கணக்கில் பணங்களை கொட்டிதான் படிக்க வைக்க முடியும், மெட்ரிகுலேஷன் பள்ளி, கான்வென்ட் தனியார் பள்ளி என பல ஆயிரம், ஏன் சில லட்சங்களை செலவளித்தால்தான் நன்றாக படிக்க வைக்க முடியும் என நம்பும் பெற்றோர்களின் முகத்தில் ஆச்சிரியகுறியை ஏற்படுத்தினார் மாநகராட்சி பள்ளில் படித்து 10-ஆம் வகுப்பு தேர்வில் மாநிலதில் முதலிடம் பிடித்த நெல்லை முஸ்லீம் மாணவி ஜாஸ்மீன். படிக்க பணம் தேவை இல்லை, பல ஆயிரண கணக்கில் பணம் கேட்கும் பள்ளிகளில் படிக்காமல் அரசு பள்ளிகளில் படித்து நம்பிக்கையும் ஆர்வமும், கடின உழைப்பும் இருந்தால் போதும் கல்வியில் சாதனை புரியலாம் என நமது மாணவர் அணியின் பிரசாரங்களுக்கு சான்றாக அரசு பள்ளியில் படித்து வியக்கதகு சாதனை புரிந்துள்ளார் மாணவி ஜாஸ்மீன்.

நல்ல பள்ளியில் படிக்க வைக்கின்றோம் என பல ஆயிரம் செலவளிக்கும் பெற்றோர்கள், கடன் வாங்கி தனியார் பள்ளியில் படிக்க வைக்கும் பெற்றோர்கள், இந்த மாணவியின் சாதனையை பார்த்து திருந்த வேண்டும். மனைவி மக்களை பிரிந்து வெளி நாட்டில் சம்பாதிக்கும் பணத்தை கல்வி நிறுவனம் நடத்துகின்றோம் என்ற பெயரில் கல்வி கொள்ளை அடிக்கும் கல்வி கூடங்களுக்கு கொடுக்காமல் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்துவிட்டு தந்தைமார்கள் தாயகம் வந்து குறைவாக சம்பாதித்தாலும் பிள்ளைகளை தினமும் ஊக்கபடுத்தி படிக்க வைத்தால் உங்கள் பிள்ளைகளும் சாதனை மாணவர்களாக வருவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

பெற்றொர்கள் இனிமேலும் நல்ல பள்ளி இருகின்றதா? எவ்வளவு பணம் வேண்டுமாலும் தருகின்றோம் என தனியார் கல்வி (கொள்ளையர்களை) கூடங்களை தேடி அழையாமல் அருகில் உள்ள அரசு பள்ளியில் சேர்ந்து தினமும் உங்கள் பிள்ளைகளின் படிப்பை கண்கானித்து படிக்கவையுங்கள்

பல்வேறு மாயைகளை உடைத்து சரித்திர சாதனை புரிந்துள்ள முஸ்லீம் மாணவி ஜாஸ்மீனை நெல்லை கல்லனையில் உள்ள அவரது வீட்டில் TNTJ மாணவர் அணி நிர்வாகிகள் கடந்த புதன் கிழைமை மாலை 4 மணி அளவில் நேரில் சந்தித்து பரிசு (இஸ்லாமிய புத்தகங்கள்) வழங்கி பாராட்டினார்கள்.



பரிசை பெற்று கொண்ட மாணவி ஜாஸ்மீன் நமது ஜமாத்திற்க்கு நன்றியையும் மாணவர் அணியின் சேவை சிறக்க துவா செய்வதாகவும் தெரிவித்தார். அல்ஹம்துலில்லாஹ்!

மேலும் நமது உணர்வு பத்திரிக்கைக்கு சிறப்பு பேட்டியும் அளித்தார்.

உணர்வு : நீங்கள் அரசு பள்ளியில் படித்து எவ்வாறு இந்த சாதனையை நிகழ்தினீர்கள்?
மாணவி ஜாஸ்மீன் : அல்ஹம்துலில்லாஹ்! (எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே!), நான் பத்தாம் வகுப்பு ஆரம்பத்திலேயே மாநிலத்தில் முதலாவதாக வர வேண்டும் என்ற எண்ணத்தில் படித்தேன், நான் தினமும் 5 வேளை தொழுது அல்லாஹ்விடம் பிரார்த்தை செய்துகொண்டு இருப்பேன். அல்லாஹ்வுடைய மிக பெரிய கிருபையால் என்னால் சாதிக்க முடிந்தது. பெண்களை படிக்கவே வைக்க கூடாது என சொல்லும் இந்த காலத்தில் எனக்கு எனது பெற்றோர்கள் மிகவும் உறுதுணையாக இருந்தனர், ஆசிரியர்களும் எனக்கு சிறப்பு கவனம் செலுத்தி என்னை படிப்பில் சிறந்து விளங்க உதவி செய்தனர். நான் 10--அம் வகுப்பு ஆரம்பத்திலேயே டிவி பார்ப்பதை விட்டுவிட்டேன், பள்ளிகூடம் முடிந்து வீட்டிற்க்கு வந்ததும் படிக்க ஆரம்பித்துவிடுவேன், படித்ததை எழுதிபார்ப்பேன், அன்றை பாடங்களை அன்றே படித்துவிடுவேன், தேர்வு வரைக்கும் படிப்பில் மட்டுமே கவனமாக இருந்தேன் என் பெற்றோர்கள் எனக்கு ஊக்கம் அளித்தனர், ஆசியிர்கள் பயிற்சி அளித்தனர்.

உணர்வு : நமது சமுதாய மாணவ, மாணவிகளுக்கு என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

மாணவி ஜாஸ்மீன் : கடினமாக உழைத்து படியுங்கள், அதிக பணம் கொடுத்து தனியார் பள்ளியில் படித்தால் தான் கல்வியில் சாதிக்கமுடியும் என்பதில்லை, படிப்பில் சிறந்து விளங்க பணம் அவசியமில்லை, நாம் எந்த பள்ளியில் படித்தாலும் ஆர்வத்துடன் கடினமாக உழைத்து படித்து தொழுது அல்லாஹ்விடம் பிரார்தனை செய்தால் நிச்சயம் அல்லாஹ் வெற்றியை தருவான். டிவி பார்த்து நேரத்தை வீணாக்காதீர்கள் அன்றைய பாடங்களை அன்றே படித்துவிடுங்கள், தினமும் அதிக நேரம் ஒதுக்கிபடியுங்கள், படித்ததை எழுதிபாருங்கள்.



உணர்வு : அடுத்து என்ன படிக்க விருப்பம்?

மாணவி ஜாஸ்மீன் : இன்ஷா அல்லாஹ் B.E கம்புயூட்டர் இஞ்சினியர் படித்துவிட்டு கலெக்டர் ஆவது எனது விருப்பம், துவா செய்யுங்கள்.



பரிசை பெற்றுகொண்டு நமது ஜமாத்திற்க்கு நன்றியை தெரிவித்தார், நமது TNTJ மாணவர் அணியின் சேவைகள் சிறக்க துவா செய்வதாகவும் தெரிவித்தார். படிப்பதற்க்கு எந்த உதவி தேவைபட்டாலும், வழிகாட்டுதல் தேவைபட்டாலும், நமது TNTJ மாணவர் அணியை தொடர்புகொள்ளுங்கள் உடனடியாக உதவி செய்கின்றோம் என மாணவியிடமும் அவரின் பெற்றோர்களிடமும் தெரிவித்துவிட்டு விடைபெற்றனர் மாணவர் அணி நிர்வாகிகள்

இந்த மாணவியின் தந்தை ஷேக் தாவூத் ஜவுளி வியாபரம் செய்பவர், தாயார் குடும்பதலைவி, ஜாஸ்மினுக்கு இம்ரான் (கூலி வேலை செய்கின்றார்) என்ற அண்ணனும், இர்பான் (6-ம் வகுப்பு படித்துகொண்டு இருகின்றார்) என்ற தம்பியும் உள்ளனர்.



மாணவியை சந்திக்கும் போதே இஸ்லாமிய முறைபடி ஹிஜாப் அணிதிருந்தார். ஹிஜாப் பெண்களின் வளர்சிக்கு தடையாக உள்ளது என காட்டுகூச்சல் இடும் பிரான்ஸ் போன்ற மேற்கத்திய நாடுகளின் காட்டுமிராண்டி வாதத்தின் கதவை அடைத்தார் 8,56,966 பேரில் முதலாவதாக வந்த ஜாஸ்மீன்.





செய்தி தொகுப்பு



S.சித்தீக்.M.Tech



TNTJ மாணவர் அணி


நன்றி : http://www.tntjpno.tk/






No comments: