கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jun 7, 2010

கடையநல்லூரில் நஜாஹ் நர்சரி துவக்கம்.


மனித வாழ்வில் ஒவ்வொரு கால கட்டத்திலும் பல்வேறு மாற்றங்களைக் காண்கிறோம். நாகரீகம், கலாச்சாரம், பண்பாடு, ஒழுக்கம், சிந்தனை இப்படி பல்வேறு வகையான மாற்றங்கள்...இது இளைய தலைமுறையினரிடம் மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. 
எதிர்கால சந்ததிகளை நாகரீகம், பண்பாடு, கலாச்சாரம் சிந்தனை ஆகியவற்றில் சிறந்தவர்களாக உருவாக்குவது பெற்றோர்கள் மற்றும் சமூகச் சிந்தனையாளர்களின் கடமையாகும்.

இவற்றைக் கருத்தில் கொண்டே அல்லாஹ்வின் அருளால், நமதூரில் நஜாஹ் நர்சரி & மெட்ரிக் ஸ்கூல் தொடங்கப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில்.அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் கடையநல்லூரில் இன்று ( 05/06/2010) காலை 10 மணியளவில் நஜாஹ் நர்சரி துவங்கப் பட்டது. PRE KG, LKG, UKG ஆகிய வகுப்புகளில் மாணவ மாணவிகள் வருகை தந்துள்ளனர். தற்போது கிட்டத்தட்ட 20 மாணவ மாணவிகள் வந்துள்ளனர் மேலும் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டுள்ளது.

இக்கல்வி ஸ்தாபணம் வெற்றிபெற அனைத்து சகோதரர்களும் ஓத்துழைப்பு வழங்குமாறும், அல்லாஹ்விடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.















No comments: