அல்லாஹ்வின் பேரருளால் 10/05/2010 – ல் அன்று இரவு ஜித்தா வாழ் கடையநல்லூர் சகோதரர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளையின் ஏற்பாட்டில் மார்க்க விளக்க கூட்டம் செனைய்யா பகுதியில் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் சகோ. சேவநல்லி முகையதீன் அவர்கள் தலைமை உரையாற்றினார்.
இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில மேலாண்மைக் குழு உறுப்பினர் மற்றும் ஜூலை 4 மாநாடுக்குழு தலைவருமான மௌலவி.ஸைபுல்லாஹ் ஹாஜா அவர்கள் "அழைப்புப் பணியின் நன்மைகள்" என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.
இதில் ஜூலை-4–ல் நடக்க இருக்கும் ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு பற்றி விளக்கமாக கூறினார்கள். அதற்க்கு கடையநல்லூர் நகரகிளை சார்பாக செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் விளக்கினார்கள். வளைகுடா சகோதரர்களின் பொருளாதார உதவி பற்றியும் விளக்கிக் கூறினார்கள்.
கடையநல்லூரில் கல்வி நிறுவனங்களால் ஏற்பட்டிருக்கும் சீரற்ற கல்விமுறை, ஒழுகக்கேடுகள் பற்றியும் பேசப்பட்டது. இதன் காரணமாக நாம் திட்டமிட்டுள்ள ஆங்கில நர்ஸரி கல்வி நிறுவனம், பாடத்திட்டங்கள், மார்க்க கல்வியும் சேர்த்து கொடுக்கும் திட்டத்தையும் அதன் பங்குகள் விபரத்தையும் விளக்கினார்கள்.
பல உறுப்பினர்கள் கேள்விகளுக்கும் மௌலவி.ஸைபுல்லாஹ் ஹாஜா அவர்கள் பதிலளித்தார்கள். பல புதிய உறுப்பினர்களும் தானாக முன் வந்து சந்தா உறுப்பினர்களாக தங்களை பதிவு செய்தார்கள். இதில் நிர்வாகிகள் அப்துல்காதர், சாகுல் ஹமீது, கவுஸ் முஹம்மது, அல் அமீன், கலீல் புகாரி ஆகியோர் பெரும் ஒத்துழைப்பு நல்கினார்கள்.இரவு சிற்றுண்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. துஆ வுடன் இனிதே நிறைவுற்றது. அல்ஹம்து லில்லாஹ்.
No comments:
Post a Comment