கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

May 12, 2010

அச்சன்புதூரில் இரு பிரிவினரிடையே மோதல்

அச்சன்புதூரில் இரு பிரிவினரிடையே மோதல்

3 பேர் மண்டை உடைப்பு

உள்ளூர் காவல்துறையே காரணம்?

தென்காசி அருகே உள்ள அச்சன்புதூரில் கோவில் திருவிழாயில் சாமியடி மேளம் அடித்து முஸ்­ம்கள் பகுதியில் நுழைவதை தடுத்ததால் இரு பிரிவினர்கள் மோதிக் கொண்டதில் இரண்டு முஸ்­ம் உட்பட 3 பேர் மண்டை உடைக்கப்பட்டனர். பஸ், ஆட்டோ, வீடு, கடைகளை அடித்து நொறுக்கப்பட்டது.
களத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

உடனடியாக நெல்லை மாவட்ட துணைச் செயலாளர் அச்சன்புதூரைச் சார்ந்த சுலைமான் அவர்கள் மாவட்ட தலைவர் யூசுப் அ­ அவர்களை தொடர்பு கொண்டு காவல் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கச் சொன்னார். உடனடியாக மாவட்டத் தலைவர் நெல்லை சரக டி.ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன் அவர்களையும் மாவட்ட எஸ்.பி. அஸ்ரா கார்க் ஆகியோரைத் தொடர்பு கொண்டு அச்சன் புதூரில் நடந்த சம்பவங்களை எடுத்துச் சொன்னார்கள். உடனடியாக காவல் உயர் அதிகாரிகள் அச்சன்புதூர் விரைந்தனர்.

அதற்குள் கடலூரி­ருந்து மாறுதலாகி வந்து புதிதாக பொறுப்பேற்றிருக்கும் தென்காசி டி.எஸ்.பி. ஸ்டா­ன் அவர்கள் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார்கள் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். உடனடியாக, மாவட்ட தலைவர் யூசுப் அ­ அவர்களின் அறுவுறுத்த­ன் பேரில் கடையநல்லூரி­ருந்து மாவட்ட துணைத் தலைவர் ஜபருல்லாஹ், நலத்திட்டச் செயலாளர் சுலைமான், நகர செயலாளர் முஹம்மது காசிம் ஆகியோர் இரவு 11 மணிக்கு அச்சன்புதூர் சென்று பாதிக்கப்பட்ட முஸ்­ம்களுக்கு ஆறுதல் கூறி கோபமாக உள்ள இளைஞர்களையும் முதியோர்களையும் அமைதிப்படுத்தினர்.

காவல் கண்காணிப்பாளர் நேரில் விசாரணை

அத்துடன் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் அவர்களை குறிச்சி சுலைமான் தொடர்பு கொண்டு அச்நன்புதூரில் நடந்தவற்றை எடுத்துச் சொல்­ முஸ்­ம் பகுதிகளுக்கு போதிய பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யவேண்டும் என்றார். உடனடியாக, பீட்டர் அவர்கள் உளவுத்துறை டி.ஐ.ஜி ஜாபர் சேட்டை தொடர்பு கொண்டு போதுமான அளவு காவல்துறையை பாதுகாப்புக்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டார். சரியாக இரவு 12 மணிக்கு மாவட்ட எஸ்.பி. அஸ்ரா கார்க் அவர்களும் 1 மணிக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன் அவர்களும் அச்சன்புதூர் வந்தனர். எஸ்.பி.யிடம் தவ்ஹீத் ஜமாஅத் உட்பட பிற அமைப்புகள் சந்தித்த போது இங்கு நடந்ததை உள்ளூர்வாசிகள் மட்டுமே என்னிடம் சொல்லுங்கள் என்றார்.

உடனடியாக, நமது ஜமாஅத்தைச் சார்ந்த மாவட்ட துணைச் செயலாளர் அச்சன்புதூர் சுலைமான் அவர்கள் நடந்ததை தெளிவாக எஸ்.பி.யிடம் எடுத்துச் சொன்னார். இதைப் போல், எதிர் தரப்பினரையும் விசாரித்து விட்டு சட்டப்படி நான் நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதியளித்தார்.

நடந்தது என்ன?

செங்கோட்டை அருகே உள்ள பேரூராட்சி அச்சன்புதூர். 2000 முஸ்­ம் குடும்பங்கள் உட்பட பல சமுகத்தினர் அண்ணன், தம்பிகளாக பழகி வருகின்றனர். காவல் நிலையம் அருகே மெயின் ரோட்டில் ஆதி திராவிடர்களுக்குச் சொந்தமான கோவில் உள்ளது. கடந்த ஆண்டு முதலே மேள, தாளம் அடித்து சாமியாடிக் கொண்டு முஸ்­ம்கள் மட்டும் குடியிருக்கும் குட்டித் தெருவிற்குள் நுழைந்து தெருவின் கடைசிப் பகுதியில் நயினார்பிள்ளைக்கு சொந்தமான தென்னந்தோப்பில் சாமி இருக்கு. பிடி மண் எடுக்கணும்.. காவு கொடுக்கணும்.. முட்டை வீசணும் என்று கூறி கடந்த ஆண்டே தெருவுக்குள் நுழைந்தனர். இந்த ஆண்டு இது போன்று நடக்கக் கூடாது என்பதற்காக ஊரில் உள்ள முக்கியஸ்தர்கள், காவல்துறை உயரதிகாரிகளுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவித்ததை அடுத்து குட்டித் தெருவுக்குள் நுழைய காவல் துறை தடை விதித்தது. நயினார்பிள்ளைவாள் அவர்கள் எஸ்.பி. அவர்களிடம் என்னுடைய தென்னந்தோப்பில் சாமியும் இல்லை. கோவிலும் இல்லை. இவர்கள் வம்புக்கு குட்டித் தெருவுக்குள் நுழைந்து பிரச்சனையை கிளப்புகிறார்கள் என்று தெரிவித்தார்.

05.05.2010 அன்று திருவிழா முடிந்ததும் முக்கிய வீதிகளில் துலக்கன் துலுக்கச்சிகளை வர விடக் கூடாது என்று கற்களை ஊன்றினார்கள். அப்போது சீனித்தேவர் பேரன் செல்வம் அவரின் தாயாரை முஸ்­ம் டிரைவர் மசூது காரில் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்ற போது தெருவில் கல் ஊன்றப்பட்டிருந்தது. இரு தரப்புக்கும் மத்தியில் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் காவல்துறை மூலம் கற்கள் அகற்றப்பட்டது. உடனடியாக ஆதி திராவிடர்கள் 200 பேர் காவல் நிலையத்திற்கு படையெடுத்தனர். பின்பு திரும்பி வரும் போது அவர்களின் கோவி­ல் மறைத்து வைத்திருந்த அரிவாள், உருட்டுக்கட்டை போன்ற ஆயுதங்களை எடுத்துக் கொண்டு முஸ்­ம் பகுதிகளில் நுழைந்து கண்மூடித்தனமாக தாக்கினர். இதில் காஜா மைதீன், சித்தீக், மாரியப்பன் ஆகியோர் படு காயமடைந்து பாளை அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களை டிஎன்டிஜே மாவட்ட தலைவர், மாவட்டச் செயலாளர் செய்யது அ­ ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர்.

காவல் நிலையத்தி­ருந்து திரும்பி வரும்போது கோவி­­ருந்து அரிவாள், கம்பு போன்றவற்றை எடுத்துச் செல்வதை காவல்துறையினர் நேரிலர் பார்த்தும் தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்தது. கலவரத்திற்குப் பின்னர் வருகை தந்த உதவி ஆய்வாளர் ஷீலா ராணியிடம் பாதிக்கப்பட்ட முஸ்­ம் பெண்கள் எங்கள் பகுதிக்குள் இந்துக்கள் கற்களை வீசுகிறார்கள் வாருங்கள் என்றதற்கு அப்போது ஷீலா ராணி எனக்கு பிள்ளை குட்டிகள் இருக்கிறது. அடித்துக் கொண்டு சாகுங்கள் என்றார். மேலும் 10 ஆண்டுகளாக எஸ்.பி. சிஐடியாக பணியாற்றி தற்போது சிறப்பு உதவி ஆய்வாளராக இருக்கும் ஹரிஹரன், ரைட்டர் வேல்சாமி, உதவி ஆய்வாளர் ஷீலா ராணி ஆகியோர் உடனடியாக இட மாற்றம் செய்யப்படவேண்டும். இவர்களுக்கு கோவில் திருவிழாவில் கலவரம் வரும் என்று தெரிந்திருந்தும் உயர் அதிகாரிகளுக்கு தகவல் சொல்­ அதிக அளவில் காவலர்களை வரவைத்து பாதுகாப்புக் கொடுத்திருந்தால் இது போன்ற கலவரங்கள் வந்திருக்காது என்று அனைத்துத் தரப்பினரும் கூறினர். இவர்கள் மீது மாவட்ட எஸ்.பி. நடவடிக்கை எடுப்பார் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

சப் கலெக்டர் தலைமையில் சமாதானக் கூட்டம்

08.05.2010 சனிக்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் செங்கோட்டை டவுண் மஹால் மண்டபத்தில் வைத்து தென்காசி கோட்டாட்சியர் மூர்த்தி தலைமையில் செங்கோட்டை வட்டாட்சியர், தென்காசி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ஸ்டா­ன் ஆகியோர் முன்னிலையில் 04.05.2010 அன்று அச்சன்புதூர் கோவில் திருவிழாவில் ஆதி திராவிட கொண்டாடும் போது இஸ்லாமிய மக்கள் அதிகமாக வசிக்கும் குட்டித் தெருவின் வழியாக சென்று வழிபாடு நடத்தி விட்டு வருப தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் முதல் இரண்டு கட்டமாக இரு பிரிவினரையும் தனித்தனியாக அழைத்துப் பேசி இறுதியில் தீர்வு காணும் வகையில் அச்சன்புதூர் ஆதி திராவிட மக்கள் மற்றும் அச்சன்புதூர் தவ்ஹீத் ஜமாஅத் நகர தலைவர் ­யாகத் அ­ உட்பட இஸ்லாமிய பிரதிநிதிகளுடன் கூட்டாக நடத்திய சமாதானக் கூட்டத்தில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டது.

1. ஏற்கனவே பிள்ளைமார்களுக்குச் சொந்தமான இடத்தில் பரம்பரையாக இருந்த பழைய கோவி­ல் வழிபாடு செய்ய இட உரிமையாளர் மறுப்புத் தெரிவித்துள்ளதால் மேலும் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும் வண்ணம் அந்த தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் ஆதி திராவிடர்கள் வழிபாடு செய்யக் கூடாது என இஸ்லாமிய மக்கள் விடுத்த கோரிக்கையை ஆதி திராவிடர்கள் ஏற்றுக் கொண்டனர்.

2. அதே போன்று இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கும் குட்டித் தெரு வழியாக திருவிழாவின் போது சாமி வழிபாட்டிற்கு செல்ல மாட்டோம் என ஆதி திராவிட மக்கள் ஒப்புக் கொண்டனர்.

3. முட்டை, கோழி போன்ற காவு கொடுக்கும் நிகழ்ச்சிகளை புதிய கோவில் அருகிலேயே நடத்திக் கொள்கிறோம் என ஆதி திராவிடர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

4. காலை நேரங்களில் இஸ்லாமிய மக்கள் தொழுகை அழைப்பு (பாங்கு) செய்யும் போது ஒ­ பெருக்கியை ஆதி திராவிட மக்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

5. இஸ்லாமியர்கள் தாங்கள் வசிக்கும் இடம் வழியாக ஆதி திராவிட மக்கள் செல்வதை எந்த விதத்திலும் தடை செய்ய மாட்டோம் என்று ஒருமித்த கருத்தில் தெரிவித்தனர்.

6. இது தொடர்பாக இனிமேல் எந்த விதமான பிரச்சனைகளும் இரு பிரிவினரும் செய்யமாட்டோம் என்றும் காவல்துறை மற்றும் வருவாய் துறையை அணுகி சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்வோம் எனவும் ஒப்புக் கொண்டுள்ளனர் மேலும் இயல்பான வாழ்க்கையில் இரு பிரிவு மக்களும் சுமூகமாக இருப்போம் எனவும் ஒருமித்து ஒப்புக் கொண்டுள்ளனர்.

No comments: