கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jun 26, 2010

ஜூலை 4 மாநாட்டு டிஜிட்டல் பேனர்கள் கிளிப்பு - சமூக விரோதிகள் அட்டகாசம்

கடையநல்லூரில் கடந்த ஒரு வாரமாக ஜூலை 4 மாநாட்டுக்கான விளம்பர பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு கடையநல்லூர் நகரின் 5 முக்கிய இடங்களில் மிகப்பெரிய அளவில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது.
இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத சமூக விரோதிகள் நேற்றிரவு (26-06-2010) ஒரு மணியளவில் கூர்மையான ஆயதங்களால் மணிக்கூண்டு,ரஹ்மானியாபுரம் முதல் தெரு, அரசினர் பெண்கள்; மேல்நிலைப் பள்ளி மற்றும் இக்பால் நகர் தெப்பக்குளம் அருகில் ஆகிய இடங்களில் வைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய மாநாட்டுப் பேனர்கள் அனைத்தும் பிளேடால் கிழித்து சேதப்படுத்தி விட்டு தப்பி சென்றனர். இது சம்பந்தமாக நகர நிர்வாகிகள் மாவட்டத் தலைவருக்கும் மாநாட்டுக்; குழு தலைவருக்கும் S.S.U.சைபுல்லா ஆகியோருக்கு தகவல்களை தெரிவித்து விட்டு காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். புகாரைப் பெற்றுக் கொண்ட காவல் ஆய்வாளர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். கிழிக்கப்பட்ட மிகப்பெரிய பேனர்களை கூட்டம் கூட்டமாக பார்த்த பொது மக்கள் இந்த இழி செயலை செய்தவர்களை சாபமிட்டனர்.





No comments: