கடையநல்லூர் மஸ்ஜிதுல் முபாரக் வளாகத்திலுள்ள நஜாஹ் நர்ஸரியில் வைத்து 18. 06. 2010 (வெள்ளிக்கிழமை) மக்ரிப் தொழுகைக்குப் பிறகு ஜூலை 4 மாநாடு குறித்து கடையநல்லூர் நகர செயல் வீரர்கள் கூட்டம் நகர தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் முஹம்மது கோரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மவ்லவி அப்துந் நாஸிர் அவர்கள் மாநாட்டின் அவசியம் குறித்து துவக்கவுரையாற்றினார்கள்.
நகர தலைவர் முஹம்மது கோரி அவர்கள் ஏற்கனவே செய்யப்பட்ட 16 சுவர் விளம்பரங்கள், பத்து ஆட்டோ பேனர் விளம்பரங்கள், தலைமை மூலம் வெளியிடப்பட்ட 14000 நோட்டிஸ்களை அச்சடித்து கடையநல்லூர் கிளை மூலமாக வெளியிடப்பட்டிருப்பதையும் உள்ளூர் கேபிளில் மாநாடு சம்பந்தமாக விளம்பரம் செய்யப்பட்டிருப்பதையும் மேலும் நகரின் முக்கிய வீதிகளில் வைப்பதற்காத 5 மெகா சைஸ் டிஜிடல் போர்டு தயார் நிலையில் உள்ளது குறித்தும் நகரில் உள்ள அனைத்து மின் கம்பங்களிலும் ஒட்டுவதற்கான 6000 ஸ்டிக்கர்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது குறித்தும் இக்கூட்டத்தில் தெரிவித்தார்.
அதன் பின்னர் செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஜூலை 4 மாநாடு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது சம்பந்தமாக கீழ்காணும் கருத்துகளைத் தெரிவித்தனர்.
அனைத்து பள்ளிவாசல் முன்பும் பேனர் வைப்பது
அனைத்து பள்ளிவாசல் முத்தவல்லி மற்றும் இமாம்களையும் சந்தித்து ஜூலை 4 மாநாடு குறித்து ஜும்ஆவில் அறிவிப்பு செய்யச் சொல்வது
கடையநல்லூரிருந்து செயல்படும் அனைத்து வெப்சைட்களிலும் மாநாடு குறித்து விளம்பரம் செய்வது
கடையநல்லூரிலுள்ள அனைத்து சங்கத்தினரையும் சந்தித்து மாநாட்டிற்கு அவர்களை அழைப்பது
மாநாடு குறித்து வீடு தோறும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவது
மாநாடு குறித்து தெருமுனைப் பிரச்சாரம் செய்வது
ஜூலை 4 மாநாட்டிற்கு முன்பாக வாகன பேரணி நடத்துவது
ஆட்டோக்கள் மூலமாக மாநாடு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வது
ரயில் மற்றும் சொந்த வாகனங்களில் செல்லும் 500க்கும் மேற்பட்டோர் நீங்கலாக கடையநல்லூரிருந்து 10 பேருந்துகளில் மாநாட்டிற்கு மக்களை அழைத்துச் செல்வது
போன்ற கருத்துக்களை இந்த செயல் வீரர்கள் கூட்டம் ஏகமனதாக ஏற்று தீர்மானங்களாக நிறைவேற்றியது.
No comments:
Post a Comment