கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Aug 22, 2010

தக்கல் முறையில் உடனடியாக ரேஷன் கார்டு வழங்க நடவடிக்கை


பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் பொருள் பெற விரும்பாதவர்கள் குடும்ப அட்டையை தக்கல் முறையில் பெற்றுக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. மஞ்சள் நிறமுள்ள "என்' கார்டு என்னும் இந்த அட்டையை இருப்பிட முகவரிக்கு சான்றாக வைத்துக் கொள்ளலாம். மனுதாரர்கள் அவர்கள் வசிக்கும் இடத்திற்கான ஆதாரத்தை வழங்க வேண்டும். அதனடிப்படையில் கார்டு வழங்கப்படும்.

இக்கார்டை கொண்டு ரேஷன் கடையில் எந்தப் பொருளையும் வாங்க முடியாது. இந்த கார்டை பெற விரும்புவோர் இதற்கென உள்ள படிவத்தை குடிமை பொருள் தாசில்தார் அலுவலகத்தில் பெற வேண்டும். அதை பூர்த்தி செய்து, அதனுடன் வாக்காளர் அடையாள அட்டை நகல், பாஸ்போர்ட் நகல், வங்கி பாஸ்புத்தக நகல், இ.எஸ்.ஐ., அடையாள அட்டை நகல், டிரைவிங் லைசென்ஸ்,டெலிபோன் பட்டியல் ஏதாவது ஒன்றை இணைக்க வேண்டும். இதனுடன் தாலுகா அலுவலகத்தில் ரூ. 100 கட்டணம் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்.

இதையடுத்து தக்கல் முறையில் ஏழு நாட்களுக்குள் கார்டுகள் வழங்கப்படும்.ஏற்கனவே ரேஷன் கார்டு வைத்திருப்போர் அல்லது விண்ணப்பிப்போர் பெயர் வேறு ரேஷன் கார்டில் இடம் பெற்றிருந்தாலும் இந்த கார்டை பெற முடியாது. இத்தகைய ரேஷன் கார்டில் உள்ளவர்கள் பெயரை தேவையெனில் நீக்கலாம். புதியவர்களை சேர்க்கலாம். ஆனால் அதற்கு சான்றுகள் வழங்கப்பட மாட்டாது என கலெக்டர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

Source: dinamalar

No comments: