கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Sep 24, 2010

முக்கிய அறிவிப்பு

ஏக இறைவனின் திருப்பெயரால் ..

அன்பார்ந்த மார்க்கச் சகோதர சகோதரிகளே ! உங்கள் மீது அந்த அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக !
இந்த அறிவிப்பு உங்களை பூரண நலத்துடனும், தூய இஸ்லாமிய சிந்தனையுடனும் சந்திக்கட்டுமாக !
ஒரு சில தின்ங்களுக்கு முன்பு நமது இந்த சைட்டில் PFI மற்றும் அதன் கட்டுப்பாட்டில் இருக்கும் அரசியல் இயக்கமான SDPI ஆகிய இயக்கங்கள் பற்றி செய்தி வெளியிடப்பட்டது தாங்கள் அறிந்ததே. !
அந்த செய்தியை கண்ட ஒரு சில சகோதரர்கள் .நீங்கள் ஏன் எங்களையே சீண்டுகிறீர்கள் (தொலைபேசி மூலமாக )என்றும் மற்றொரு சகோதரர் நமது சைட்டிற்கு நேரிடையாக (கருத்து மூலமக ) ” I know How to Block this Blogspot or URL.   என்றும் தங்களின் கோபத்தை (?) வெளிப்படுத்தி உள்ளனர்.
அவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் , எங்களுக்கும் அந்த அமைப்பிற்கும் ஏதாவது வாய்க்கால் தகராறா?, அல்லது அவர்கள் பணத்தை நாங்களோ, எங்கள் பணத்தை அவர்களோ  ஏமாற்றிவிட்டனரா?? இல்லை !! பிரச்சனை அதுவல்ல. மற்ற மற்ற அரசியல் கட்சிகள் விநாயக சதூர்த்தியை வாழ்த்துவது போல் வாழ்த்துத் தெரிவித்தால் அதை யாரும் கேட்கப் போவதில்லை. மற்றவர்கள் போலவா இவர்கள் அமைப்பு தொடங்கினார்கள்? ஜிஹாத் ஐ சொல்லி , இளைஞர்களை மூளை சலவை செய்து தங்கள் பக்கம் இழுத்தவர்கள். தாங்கள்தான் உண்மையான இஸ்லாத்தைச் சொல்பவர்கள். ஷிர்க், பித்அத் என்று சமுதாயத்தை தவ்ஹீத் ஜமாஅத்தினர் கூறு போடுகின்றனர் என்றல்லவா இவர்கள் அமைப்பை கட்டினார்கள். இப்படிப்பட்டவர்கள் இஸ்லாத்தை விட்டே வெளியேறும் செயல்களைச் செய்கிற போது அது தவறு என்று உணர்ந்தவர்கள் சமுதாயத்திற்கு சுட்டிக் காட்ட கடமைப்பட்டவர்களாவர். அது மட்டுமல்ல இது உபதேசமாகவும் இருக்கிறது.

அல்லாஹ் கூறுகிறான்.
          அது உபதேசமாகவும் இருக்கிறது அல்லாஹ் கூறுகிறான் அறிவுரை பயன் தருமானால் நீர் அறிவுரை கூறுவீராக (இறைவனை) அஞ்சுபவன் படிப்பினை பெறுவான் துர்பாக்கியசாலி அதிலிருந்து விலகிகொள்வான்
(அல்குர்ஆன் 87-9-11)

அந்த காரியத்தையே அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாமல் இந்த சைட் செய்து வருகிறது , இன்ஷா அல்லாஹ் இனியும் செய்யும் ஏனெனில் அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்.

ன்மையை ஏவி , தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் ஒரு சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றவர்கள்.
(அல் குர் ஆன் 3:104) 
தனது அடியாருக்கு அல்லாஹ் போதுமானவன் இல்லையா? அவனல்லாதோரைப் பற்றி அவர்கள் உம்மை அச்சுறுத்துகின்றனர். அல்லாஹ் யாரை வழிகேட்டில் விட்டானோ அவருக்கு நேர்வழி காட்டுபவன் இல்லை.
(அல் குர்ஆன் 39 : 36)
நம்பிக்கை கொண்டோரே! உங்களில் யாரேனும் தமது மார்க்கத்தை விட்டு மாறி விட்டால் அல்லாஹ் வேறொரு சமுதாயத்தைக் கொண்டு வருவான். அவன் அவர்களை விரும்புவான். அவர்கள் அவனை விரும்புவார்கள். அவர்கள் நம்பிக்கை கொண்டோரிடம் பணிவாகவும், (ஏக இறைவனை) மறுப்போரிடம் தலை நிமிர்ந்தும் இருப்பார்கள். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவார்கள். பழிப்போரின் பழிச் சொல்லுக்கு அவர்கள் அஞ்ச மாட்டார்கள். இது அல்லாஹ்வின் அருள். தான் நாடியோருக்கு அதை அவன் அளிப்பான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.
                                                                   (குர்ஆன் 5 : 54)
அதே நேரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தோ அல்லது அதன் நிர்வாகிகளோ குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸுக்கு  மாற்றமாக நடப்பார்களேயானால் அவர்கள் தாராளமாக தங்கள் கருத்தை இந்த சைட்டில் பதிவு செய்யலாம். உண்மையிலேயே நாங்கள் செய்யும் செயல குர்ஆன் மற்றும் ஹதீஸுக்கு மாற்றமாக இருக்கும் பட்சத்தில் நிச்சயமாக நாங்கள் எங்களை மாற்றிக் கொள்ளத் தயார். இன்ஷா அல்லாஹ்.

1 comment:

Abu Faheem said...

இக்கருத்தினை நேற்றையதினம் நான் பதிந்திருந்தேன் இது வரை தாங்கள் வெளியிடவில்லை எனவே இன்றாவது வெளியிடுவீர்கள் என நம்புகின்றேன்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

அன்பரே தங்களின் குற்றச்சாட்டுடைய SDPI பேனர் எங்கு எந்தஊரில் எவ்விடத்தில் வைக்கப்பட்டது என்பதை தெளிவாகக்கூறமுடியுமா? அப்படியே வைத்திருந்தாலும் அதற்கு வைத்தவர்களின் மேல் (வைத்தவர்கள் முஸ்லிம்களாக இருந்தால்) SDPI நிர்வாகிகள் என்ன நடவடிக்கைஎடுத்தார்கள் என ஏதும் தெரியுமா? ஏனென்றால் SDPI யில் தவ்ஹீதை கொள்கையாகக்கொண்டவர்கள் மட்டும் உருப்பினர்கள் கிடையாது மாறாக இஸ்லாத்தைபற்றி அறியாத மாற்றுமதத்தவர்கள் கூட உருப்பினர்களாக இருக்கின்றனர் SDPI என்பது இந்தியாவில் உள்ள ஒடுக்கபட்ட, மற்றும் பிற்படுத்தப்பட்ட அனைத்துமக்களுக்காகவும் உள்ள ஒரு அரசியல் பேரியக்கம் என்பது அனைவரும் அறிந்ததே மேலும் தங்களுக்கு தொரிந்திருக்கும் என நினைக்கின்றேன் தென்மாநிலங்களிள் உள்ள விழிப்புனர்வு வட மாநிலங்களிள் முஸ்லிம்கள் மத்தியில் இல்லை (இஸ்லாம் மற்றும் பொதுவிசயங்களிள்)ஆக அங்கு முஸ்லிம்களாக உள்ள சிலர்கூட சிந்திக்காமல் இது போன்ற செயல்கள் செய்திருக்கலாம் அதற்க்கு அகில இந்தியத்தலைமை பொருப்பேற்க்கமுடியாது விசயத்தில் எங்கு குறைஉள்ளது என்பதை கண்டரிந்து சரிசெய்யவே தலைமை முயலும். மாநிலத்திற்குள் மட்டுமே கட்சிநடத்தும் இயக்கங்களிலேயே பல குறைபாடுகள் பிரச்சினைகள் வரும்போது இந்தியாவின் பல மாநிலங்களிலும் பல்லாயிரக்கணக்கான உருப்பினர்களையும் தொன்டர்களையும் வைத்து அரசியல் இயக்கம் நடத்தும் அதுவும் இஸ்லாத்தைபற்றி அறவே தெளிவுபெறாத முஸ்லிம்கள் அதிகமாக வாழும் வட மாநிலங்களிள் இதுபோன்ற பிரச்சினைகள் வருவது இயல்பே இதனை இகில இந்திய மற்றும் மாநிலத்தலைமைகள் கண்டரிந்து சரிசெய்வார்கள் என நம்புகிறோம். ஆகவே தாங்கள் உன்மைஎன்ன என்பதை அறிந்து விமர்சிக்குமாரு கேட்டுக்கொள்கிறேன்

மேலும் தாங்கள் குறிப்பிட்டுள்ள பேனரில் சர்ச்சைக்குரிய வார்த்தைகள் மட்டும்தான் தெளிவாக உள்ளது மற்ற எதுவும் தெளிவாக இல்லை என்பதும் சந்தேகத்தை உண்டாக்குகிறது என்பதையும் புரிந்துகொள்ளவும்

இப்படிக்கு
அபுஃபஹீம் - ரியாத்