அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் சார்பாக பல்வேறு விதமாக தவ்ஹீத் அழைப்புப்பணி நடைபெற்று வருகிறது.
தனிமனித சந்திப்பு :
மாநில மேலாண்மைக் குழு உறுப்பினர் சகோ.அப்துந் நாசர் மற்றும் அபுதாபி மண்டலச் செயலாளர் சகோ.அப்துல் ஸலாம் ஆகியோர் நமது இளைஞர்களை சந்தித்து ஏகத்துவத்தை விளக்கிக் கூறினார்கள்.
உள்ளரங்கு தாவா :
கடையநல்லூரில் பெண்களுக்கு மானபங்கம் ஏற்படாதவாறு எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்பது சம்பந்தமாக உரை அல் மஸ்ஜிதுல் முபாரக்கில் நடைபெற்றது.
கடையநல்லூர் தக்வா பள்ளிவாச ல் மக்ரிப் தொழுகைக்குப் பின் அபுதாபி மண்டல செயலாளர் அப்துஸ் ஸலாம் அவர்களும் மசூது அவர்களும் உரையாற்றினர்.
தெருமனைப் பிரச்சாரம்:
கடையநல்லூர் கலந்தர் மஸ்தான் தெருவில் வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்குப் பின் அபுதாபி மண்டல செயலாளர் அப்துஸ் ஸலாம் அவர்களும் மசூது அவர்களும் சமூக கொடுமைகள் குறித்து உரையாற்றினார்கள். பெருந்திரளான மக்களும் வீடுகளி ருந்து பெண்களும் கேட்டு பயனடைந்தனர்.
சொற்பயிற்சி மன்றம் :
ரமலான் மாதத்தின்காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொற்பயிற்சி மன்றம் கடையநல்லூர் முபாரக் பள்ளிவாசல் வளாகத்தில்(நஜாஹ் நர்ஸரி) மக்ரிப் தொழுகைக்குப் பின் ஓ.எஸ். ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் ஓ.எஸ். ரஹ்மத்துல்லாஹ் அவர்களும் அபுதாபி மண்டல செயலாளர் அப்துஸ் ஸலாம் அவர்கள் அழைப்புப் பணியின் அவசியத்தை விளக்கிக் கூறினார்கள்.
No comments:
Post a Comment