08.09.2010 (புதன்) மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் இந்த மனுவை கொடுப்பதற்காக டிஎன்டிஜே மற்றும் மஸ்ஜிதுல் முபாரக் நிர்வாகிகள் தலைமையில் காயிதே மில்லத் திடல் மக்கள் பெருந்திரளாகக் கூடினர்.
பெருந்திரளான மக்களைக் கண்டு அங்கு வந்த கடையநல்லூர் ஆய்வாளர் அவர்களிடமும் இந்த மனு அளிக்கப்பட்டது. அவர் தக்க நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்ததார். மேலும் சம்பவ இடத்தை பார்வையிட வந்த வருவாய் ஆய்வாளர் அவர்களிடமும் நிலைமை எடுத்துச் சொல்லப்பட்டது. பிறகு இந்த மனுவை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் கொடுப்பதற்காக மெயின் பஜார் வழியாக சேனைத் தலைவர் மண்டபத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களைச் சந்தித்து மனுவைக் கொடுத்தனர். உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தார்
மனு விபரம் :
பெறுநர்
உயர்திரு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள்,
திருநெல்வேலி
பொருள் : நோன்புப் பெருநாள் தொழுகை திடல் சம்பந்தமாக..
உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக..
ஐயா,
கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக கடந்த பல ஆண்டுகளாக முஸ்ம்களின் புனித நாட்களான நோன்பு மற்றும் ஹஜ்ஜ‚ப் பெருநாள் ஆகிய நாட்களில் பொதுமக்களின் பயன்பாட்டிற்குச் சொந்தமான காயிதே மில்லத் திடல் பல்லாயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் ஒன்று கூடி பெருநாள் தொழுகை நடத்துவது வழக்கம்.
ஒவ்வொரு முறையும் தர்காவுக்கு சொந்தமான யானையை குறிப்பாக அந்த நாளில் மட்டும் திடல் கட்டி இடையூறு செய்து வருகிறார்கள். இதனால் யானைக்கு மதம் பிடித்து விடுமோ என்று திடல் தொழ வருபவர்கள் ஒவ்வொரு முறையும் பயந்து நடுங்குகிறார்கள்.
மேலும் யானை கழிக்கும் சிறுநீர், மலம் ஆகியவற்றால் சுற்றப்புறம் முழுவதும் துர்நாற்றம் ஏற்படுகிறது. தொழுகைக்கு வருபவர்கள் மன நிம்மதியின்றி திரும்பிச் செல்கின்றார்கள். ஆகையால் பெருநாள் தொழுகைக்காக யானையை பெருநாளுக்கு முந்திய நாளிருந்து பெருநாள் மதியம் வரை யானையை அப்புறப்படுத்தி வேறிடத்தில் கட்ட உத்தரவிடுமாறு பொதுமக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
இது சம்பந்தமாக காவல்துறைக்கும் வனத்துறைக்கும் பல முறை மனுச் செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மேலும் இந்த ஆண்டு அரசு ஒப்பந்தக்காரர் ஒருவர் வேண்டும் என்றே கற்கள் மற்றும் மணல்களை குவியல் குவியலாக திடல் குவித்து வைத்துள்ளார். அவரிடம் பல முறை தெரிவித்தும் இதுவரை சல் மற்றும் மணல்கள் அகற்றப்படவில்லை. இது சம்பந்தமாக நகராட்சி ஆணையாளரிடமும் மனுக் கொடுத்துள்ளோம். தாங்கள் தொழுகைத் திடலை பார்வையிட்டு அதற்கான ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி.
இவண்,
செயலாளர்
No comments:
Post a Comment