கடையநல்லூர் மக்கா நகரில் நமது தவ்ஹீத் பள்ளிக்கு அருகில் ஒரு பொதுப் பாதையை சிலர் ஆக்கிரமித்து மனைகளாக்கியிருந்தனர். இது விஷயமாக நடவடிக்கை எடுக்க அந்தப் பகுதி மக்கள் கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு மனுச் செய்து பொதுப்பாதையை மீட்டுத் தருமாறு கேட்டிருந்தனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் மேலாண்மைக்குழு உறுப்பினர் சகோ.எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ் அவர்களுடைய தலைமையில் அந்த இடத்திற்குச் சென்று பார்வையிட்டனர் பிறகு அதனை நகராட்சி சர்வேயரை வரவழைத்து அளக்கச் செய்து முறைப்படுத்தப்படுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment