கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Dec 12, 2010

தார்பியா (நல்லொழுக்கப் பயிற்சி நிகழ்ச்சி)

ல்லாஹ்வின் கிருபையால், 12.12.2010 (ஞாயிறு) காலை 10.30 மணி முதல் 1.30 வரை கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்த தர்பியா (நல்லொழுக்கப் பயிற்சி) நிகழ்ச்சி மஸ்ஜித் தக்வாவில் நடைபெற்றது.
நகர டிஎன்டிஜே மற்றும் மஸ்ஜித் முபாரக்மஸ்ஜித் தக்வாமஸ்ஜித் சீனா நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சிக்கு மேலாண்மைக் குழு உறுப்பினர் சகோ.எஸ்.எஸ்.யூ. ஸைபுல்லாஹ் அவர்கள் தலைமை தாங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாநில மேலாண்மைக் குழு உறுப்பினர் சகோ.அப்பாஸ் அலி M.I.Sc­. அவர்கள் ஆணவம் என்ற தலைப்பிலும் மாநில பேச்சாளர் சகோ.அப்துர் ரஹ்மான் பிர்தவ்ஸி அவர்கள் பித்னா(குழப்பம்) என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.
மேலும் நடந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் ஜனாஸா மற்றும் திருமணம் சம்பந்தப்பட்ட அனைத்து காரசாரமான கேள்விகள் அனைத்திற்கும் சகோ.அப்பாஸ் அலி­ மற்றும் சகோ.அப்துர் ரஹ்மான் பிர்தவ்ஸி ஆகியோர் மிகத் தெளிவான விளக்கமளித்தார்கள்.
இறுதியில் ஒரு சகோதரர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
நூற்றுக்கணக்கான சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்.! 




































No comments: