கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jan 16, 2011

ஜனவரி 27 போராட்டம் ஏன் ? - விளக்கப் பொதுக் கூட்டம்

ல்லாஹ்வின் மகத்தான கிருபையால் கடையநல்லூர் நகர தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக 15.01.2011 சனிக்கிழமை மாலை 7 மணியளவில் காயிதே மில்லத் ஈத்கா திடலில் பாபர் மஸ்ஜித் தொடர்பான அலகாபாத் உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பைக் கண்டித்து மதுரையிலும் சென்னையிலும் ஜனவரி 27ல் நடைபெறும் பேரணி, ஆர்ப்பாட்டம் ஏன்? எதற்கு விளக்கப் பொதுக்கூட்டம் போரட்டக் குழு தலைவர் சகோ.ஏஸ்.ஏஸ்.யூ. ஸைபுல்லாஹ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சகோ.யூசுப் அலி, மாவட்ட செயலாளர் சகோ.செய்யது அலி, மாவட்ட துணைத் தலைவர் சகோ.டி.எம். ஜபருல்லாஹ், மாவட்ட நலத்திட்ட செயலாளர் சகோ.சுலைமான் மற்றும் நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் சகோ.ஏம். பக்கீர் முஹம்மது அல்தாபி அவர்கள் சிறப்புரையாற்றினார். இறுதியில் நகர தலைவர் சகோ.முஹம்மது கோரி அவர்கள் நன்றி கூறினார்கள். இந்தக் கூட்டத்திற்கான ஏற்பாட்டை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நகர நிர்வாகிகள் சிறப்பாகச் செய்திருந்தனர்.
இப்பொதுக்கூட்டத்தில் கடையநல்லூரைச் சுற்றியிருக்கின்ற சங்கரன்கோவில், வீராணம், வாசுதேவநல்லூர், புளியங்குடி, தென்காசி, அச்சன்புதூர், வடகரை, வாவா நகரம், செங்கோட்டை, அம்பை, வல்லம், சொக்கம்பட்டி போன்ற சுற்றுப் புறங்களிலிருந்து நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1.         அலகாபாத் உயர்நீதி மன்றம் லக்னோ பெஞ்ச் பாபர் பள்ளிவாசல் குறித் வழங்கிய அநியாய தீர்ப்பைக் கண்டித்தும் உச்சநீதி மன்றம் தானாக முன்வந்து இந்த வழக்கை மறு விசாரணைக்கு உட்படுத்த வலியுறுத்தியும் ஜனவரி 27ல் சென்னை, மதுரை உயர்நீதி மன்றங்களை நோக்கி நடைபெறும் கண்டன பேரணி, ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம்கள் பெரும் திரளாக கலந்து கொள்ளவேண்டும்.
2.         ஒரு இடம் யாருக்கு உரியது என்பதை முடிவு செய்ய அந்த இடத்திற்கான ஆவணத்தையும் அனுபோகத்தையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பளிக்கவேண்டும் என்பதுதான் உரிமையியல் (சிவில்) வழக்குகளில் உலகம் முழுக்க பின்பற்றப்படும் சட்ட நடைமுறையாகும். பாபர் மசூதி தொடர்பாக அலகாபாத் உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பு எந்த சட்ட விதிகளையும் பின்பற்றாமல் கட்டப் பஞ்சாயத்து பாணியில் அமைந்திருக்கிறது. ஆகவே, உச்ச நீதிமன்றம் தானாக முன் வந்து இந்த வழக்கை மறு விசாரணை செய்து உரிய தீர்ப்பு வழங்கவேண்டும்.
3.         ஏக இறைவனை மறுத்து, இணை வைத்து நிரந்தர நரகத்திற்கு இழுத்துச் செல்லும் சமாதி வழிபாட்டை முஸ்லிம்கள் முற்றிலும் கைவிடவேண்டும். முஸ்லிம்கள் தங்கள் வாழ்க்கையின் அனைத்து மட்டங்களிலும் அல் குர்ஆனையும் குர்ஆனுக்கு முரண்படாத ஆதாரப்பூர்வமான நபிமொழிகளை மட்டுமே கடைபிடிக்கவேண்டும்.
4.         தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு 3.5% இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இது வெறும் ஏட்டளவில்தான் உள்ளதே தவிர நடைமுறையில் இல்லை. உயர் பதவியில் உள்ள அதிகாரிகளின் மோசடிகளே இதற்கு காரணம் ஆகும். எனவே, அருந்ததியர்களுக்கு அமைக்கப்பட்டது போல முஸ்லிம்களுக்கும் இட ஒதுக்கீட்டைக் கண்காணிக்க குழு அமைக்கப்படவேண்டும்.
5.         பல ஆயிரம் கோடிக்கும் மேற்பட்ட சொத்துக்களில் பெரும் பகுதி அரசியல்வாதிகளும் சமுக விரோதிகளும் சுருட்டி விட்டனர். வக்ஃப் சொத்து ஆக்ரமிப்புக்கு முத்தவல்லிகளும் வக்ஃப் அதிகாரிகளும் காரணமாக உள்ளனர். எனவே, வக்ஃப் வாரியம் கலைக்கப்பட்டு ஒவ்வொரு ஊரிலும் உள்ள வக்ஃப் சொத்துக்கள் அவ்வூர் முஸ்லிம்களிடம் ஒப்படைக்கப்படவேண்டும்.
6.         கடையநல்லூரில் வண்ணத் தொலைக்காட்சி பெறும் பயனாளிகளை தேர்வு செய்வதில் பாரபட்சம் காட்டிய நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி பணியாளர்கள் மற்றும் வருவாய் துறையினர் ஆகியோரை வன்மையாகக் கண்டிக்கிறோம். இப்பகுதியில் குடியிருக்கும் அனைத்து வீடுகளுக்கும் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கப்படவேண்டும்.
7.         ஏழை முஸ்லிம் மாணவர்களுக்கு கல்விக்காகவும் முஸ்லிம்கள் தொழில் செய்வதற்கும் வீடு கட்டுவதற்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வட்டியில்லா கடன் வழங்கப்படவேண்டும்.
8.         கடையநல்லூர் பொதுமக்கள் நலன் கருதி, அரசு உடனடிகாக உழவர் சந்தை அமைத்துத் தரவேண்டும்.
9.         நகராட்சி சொந்தமான வாரச் சந்தை, தினசரி மார்க்கட் ஆகிய இரண்டில் ஒன்றை தமிழக அரசு உழவர் சந்தை அமைப்பதற்கு நகராட்சி விட்டுக் கொடுக்கவேண்டும்.
10.       அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியை அரசு கலைக் கல்லூரியாக தரம் உயர்த்த தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.
11.       பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளிலுள்ள சுடுகாடுகள் அனைத்தையும் மின்மயமாக்க வேண்டுமென்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.
12.       பள்ளி மாற்றுச் சான்றிதழில் உள்ள பிறப்புத் தேதியை அடிப்படையாக மட்டும் வைத்துக் கொண்டு உள்ளாட்சி அமைப்புகள் பிறப்புச் சான்றிதழை வழங்கிட தமிழக அரசு உடனடியாக அரசாணை பிறப்பிக்கக் கேட்டுக் கொள்கிறோம்.
13.       பொதுமக்களின் நலன் கருதி மின்கட்டணம் செலுத்தும் இடத்தை நகரின் மையப்பகுதியில் அமைத்திட தமிழ்நாடு மின் வாரியத்தை கேட்டுக்கொள்கிறோம்.
14.       கடையநல்லூர் மெயின் பஜார் பகல் நேரங்களில் கனரக வாகனங்களால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே, காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை கனரக வாகனங்கள் மெயின் பஜாரில் வந்து செல்வதற்கு தடை விதிக்க காவல்துறையைக் கேட்டுக் கொள்கிறோம்.
15.       காவல் நிலையம் அருகிலுள்ள ரயில்வே பீடர் ரோட்டிலேயே தக்காளி மொத்த வியாபாரம் நடைபெறுகிறது. இதனால், அவசர நோயாளிகள் மருத்துவமனைக்கும் பள்ளிக் குழந்தைகள், பொதுமக்கள் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையங்களுக்குச் செல்லும் பயணிகளின் போக்குவரத்து பெரிதும் பாதிக்கபடுகிறது. இதை உடனடியாக மாற்று இடத்திற்கு அப்புறப்படுத்திட நகராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறையைக் கேட்டுக் கொள்கிறோம்.
16.       அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சுற்றி சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தும் குப்பைகள், நடமாடும் பழக்டை, இட்லிக்கடை போன்றவைகளால் பள்ளிக் குழந்தைகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கின்றனர். உடனடியாக இவையனைத்தும் அப்புறப்படுத்தவேண்டும் என நகராட்சியையும் காவல்துறையையும் கேட்டுக் கொள்கிறோம்.
17.       சார் பதிவாளர் அலுவலகம் அருகில் சுகாதாரமற்ற முறையில் திறந்த வெளியில் நடக்கும் ஆட்டிறைச்சி வியாபாரத்தை நகராட்சி நிர்வாகம் உடனடியாக தடை செய்யவேண்டும்.
18.       மதச் சார்பற்ற நாட்டில் தமிழ்ப் புத்தாண்டையும் பொங்கலையும் அரசு ஊழியர்கள் அனைவரும் கொண்டாடவேண்டும் என்று உத்தரவிட்ட தமிழக அரசை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது.
19.       கடையநல்லூர் பொதுமக்கள் எரிவாயு சிலிண்டர் குறித்த நேரத்தில் கிடைக்காமல் மிகவும் அவதியுறுகின்றனர். செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி பொதுமக்களை சிரமத்திற்குள்ளாக்கும் எரிவாயு முகவர் சாந்தி ஏஜென்ஸியை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
20.       ஒட்டு மொத்த கடையநல்லூருக்கும் நான்கு எரிவாயு ஏஜென்ஸிக்கான உரிமங்களை உடனடியாக வழங்கிட மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகத்தைக் கேட்டுக் கொள்கிறோம்.














No comments: