கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jan 26, 2011

கடையநல்லூரில் ஜனவரி 27 க்காக விழிப்புணர்வு வாகனப் பேரணி


ல்லாஹ்வின் கிருபையால், 26. 01. 2011 (புதன்கிழமை) மாலை அஸர் தொழுகைக்குப் பின் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் கிளை ஜனவரி 27 க்காக ஏற்பாடு செய்த விழிப்புணர்வு வாகனப் பேரணி நடைபெற்றது.
இந்தப் பேரணி மஸ்ஜிதுல் முபாரக்கில் தொடங்கி இரசா­யாபுரம் தெரு. அல்­மூப்பன் தெரு, இக்பால் வடக்குத் தெரு, கலந்தர் மஸ்தான் தெரு, அட்டக்குளத் தெரு, பேட்டையிலுள்ள பெரிய பள்ளித் தெரு, ரஹ்மானியாபுரம், மக்கா நகர் முக்கிய தெருக்களின் வழியாகச் சென்று மெயின் ரோடு வழியாக மணிக்கூண்டுடன் பேரணி நிறைவடைந்தது.

இதில் சகோ. முஹிப்புல்லாஹ் உமரி அவர்களும் சகோ. முஹம்மது கோரி அவர்களும் ஜனவரி 27 பேரணி, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவேண்டுமென உரையாற்றிய பின் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. இந்நிகழ்ச்சியை நகர நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். பெருந் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.



































No comments: