கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jan 11, 2011

கிழக்கு மாகாணத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் உதவி கோருகிறது.

அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே !

இலங்கையின் பல பகுதிகளிலும் தொடராக மழை பெய்து வருவதால் இங்கு வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த வெள்ளப் பெருக்கின் காரணமாக இலங்கையின் பல பாகங்களும் தண்ணீரில் மூழ்கியுள்ளதுடன் அங்கிருக்கும் மக்கள் அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
குறிப்பாக கிழக்கு மாகாணம் முழுவதும் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு அவதியுறுகிறார்கள்.
அன்பின் சகோதரர்களே!
நாம் சிறப்பாக உண்ணுகிறோம்,சந்தோஷமாக இருக்கிறோம்,நன்றாக உடுக்கிறோம்,ஆரோக்கியமாக வாழ்கிறோம்.
ஆனால் நமது தொப்புல் கொடி உறவுகளான அந்த கிழக்கு வாழ் மக்கள் உண்ண உணவின்றி,தங்க இடமின்றி,உடுக்க ஆடையின்றி,குழந்தைகளுக்கு கொடுக்க பால் இன்றி கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
நோயாளிகள் மருத்துவ உதவியின்றி உயிரிழக்கிறார்கள்.
அந்த மக்களுக்கு நாம் கண்டிப்பாக உதவிக் கரம் நீட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
அன்பின் சகோதரர்களே! செல்வந்தர்களே! ஜமாத் நிர்வாகிகளே! வெளிநாடு வாழ் சகோதரர்களே!
இலங்கையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உங்களால் எந்த உதவியை செய்ய முடியுமோ அவற்றை செய்து உதவுமாறு ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் உங்களிடம் அன்பாகக் கேட்டுக் கொள்கிறது.
ஆதமுடைய மகனே நீ (கொடு) செலவிடு! உனக்கு நான் செலவிடுகிறேன் (கொடுக்கிறேன்)  என்று அல்லாஹ் சொல்வதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி),நூல்: புகாரீ (5352)
வசதி படைத்தவர்களாகிய நாம் வசதி இல்லாதவர்களுக்கு எந்த வகையில் உதவினாலும் அதன் மூலம் நாம் முழுமையான பலனை அனுபவிப்போம்.
நல்ல வற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அது உங்களுக்கே. அல்லாஹ்வின் திருப்தியைப் பெறவே செலவிடுகிறீர்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் உங்களுக்கே அது முழுமையாக வழங்கப்படும். நீங்கள் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள். (அல்குர்ஆன் 2 : 272)
நாம் வழங்கும் தர்மம் மறுமையில் அல்லாஹ்வால் பல மடங்கு உயர்த்தப்பட்டு மிகப் பெரிய கூலியாக வழங்கப்படும்.
தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன் மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன். (அல்குர்ஆன் 2 : 261)
வெள்ளத்தினால் பாதிக்கப் பட்டவர்களுக்கான உங்கள் உதவிகளை அனுப்ப வேண்டிய முகவரி மற்றம் கணக்கிலக்கம்
.
SRILANKA THAWHEED JAMATH,
HATTON NATIONAL BANK
MARADANA BRANCH
A/C NO : 108010104971

மேலதிக் விபரங்களுக்கு
 ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் தேசிய தலைவர் ஆர்.எம்.ரியால் 0777255467
தேசிய செயலாளர் அப்து ராசிக் 0771254254
பொருளாலர் சேக் கமர்தீன் 0777413849
சமூக சேவைப் பகுதிப் பொருப்பாளர் முயீனுத் தீன் 0777176321

No comments: