தென்காசி அருகே இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற புளியங்குடியைச் சேர்ந்த டிஎன்டிஜே சகோதரர் விபத்தில் படுகாயம். மீட்புப் பணியில் கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள்.
09.01.2011 (ஞாயிறு) மாலை 4 மணிக்கு கடையநல்லூர் அருகே உள்ள துரைச்சாமிபுரத்தில் புளியங்குடி ரஹ்மத் நகரைச் சார்ந்த டிஎன்டிஜே சகோதரர்கள் தென்காசியில் நடைபெறும் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இரண்டு நபர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் தென்காசியை நோக்கி பயணம் செய்தனர். அப்போது துரைச்சாமிபுரம் அருகே மோட்டார் சைக்கிள் வந்த போது திடீரென்று சாதா சைக்கிளில் வந்த துரைச்சாமிபுரத்தைச் சேர்ந்த சிறுவன் ரோட்டின் சைக்கிளுடன் குறுக்கே பாய்ந்ததில் மோட்டார் சைக்கிள் சிறுவன் மீது மோதி சிறுவன் உட்பட மூன்று நபரும் தூக்கி வீசப்பட்டு இருவர் படுகாயமடைந்தனர்.
அப்போது இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்ற மாநில நிர்வாகி, மேலாண்மைக் குழு உறுப்பினர் எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ் ஹாஜா, மாவட்ட அரசு நலத்திட்ட செயலாளர் குறிச்சி சுலைமான் ஆகியோர் படுகாயமடைந்த மூவரையும் கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆம்புலன்ஸை உடனடியாக வரைவழைத்து அவசர சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பின்னர் ஒரு மணி நேரம் தாமதமாக வந்த அரசு ஆம்புலண்ஸ் 108க்கு எதிராக பொதுமக்கள் கோஷமிட்டு திருப்பி அனுப்பினர். அதன் பின்னர் தென்காசி அரசு மருத்துவமனைக்கு மேலாண்மைக் குழு உறுப்பினர் எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ் ஹாஜா, சென்று படுகாயமடைந்தவருக்கு தீவிர சிகிச்சை அளிக்குமாறு அரசு மருத்துவரை கேட்டுக் கொண்டார். இது சம்பந்தமாக இலத்தூர் போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
No comments:
Post a Comment