அல்லாஹ்வின் கிருபையால், 14. 01. 2011 (வெள்ளிக்கிழமை) மாலை மக்ரிப் தொழுகைக்குப் பின் ஜனவரி 27 மதுரை உயர் நீதி மன்றத்தை நோக்கி பேரணி, ஆர்ப்பாட்டம் சம்பந்தமாகவும் 15.01.2011ல் டிஎன்டிஜே மாநில தலைவர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் பற்றியும் கடையநல்லூர் நகர செயல் வீரர்கள் கூட்டம் நஜாஹ் நர்ஸரி வளாகத்தில் நடைபெற்றது.
நகர தலைவர் சகோ.முஹம்மது கோரி அவர்கள் தலைமை தாங்கிய இக்கூட்டத்திற்கு டிஎன்டிஜே மாவட்ட துணைத் தலைவர் சகோ.டிஎம். ஜபருல்லாஹ் அவர்களும் நகர மற்றும் நபிவழி பள்ளிவாசல் நிர்வாகிகளும் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் ஜனவரி 27 ஏன்? என்ற தலைப்பில் சகோ.எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்.
பிறகு, ஜனவரி 27 சம்பந்தமாக செய்யப்பட்ட முன்னேற்பாடுகள் குறித்து விளக்கப்பட்டு மேலும் செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து சகோதரர்களிடமிருந்து ஆலோசனைகள் கேட்டு பதிவு செய்யப்பட்டது
No comments:
Post a Comment