திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவா; அலுவலக மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் சிறுபான்மையினா; கலந்தாய்வு கூட்டம் 18-02-2011, வௌ;ளிக்கிழமை காலை 11 மணி அளவில் மாவட்ட ஆட்சித்தலைவா; மு. ஜெயராமன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ரமணசரஸ்வதி அவர்கள் முன்னிலையில் வகித்தார் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு மாநில சிறுபான்மையினாரின் ஆணையத் தலைர்; வின்சென்ட் சின்னத்துரை, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினாரின் ஆணைய உறுப்பிர்; செயலர் பசீர் அகமது IAS ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக மாவட்ட அரசு நலத்திட்ட செயலாளார் ‘குறிச்சிகுளம் ’சுலைமான் அவர்கள் கலந்து கொண்டு கீழ்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற ஆணையம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யவேண்டும் என்று பேசினார்.
1. முஸ்லீம்களின் இடஒதுக்கீட்டை கண்காணிக்க குழு அமைத்த தமிழக அரசுக்கு முதலில் நன்றியைத் தொரிவித்துக் கொள்கிறோம்.
2. 3.5 சதவீதம் உள் இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயா;த்த அரசுக்கு ஆணையம் பரிந்துரை செய்யவேண்டும்.
3. முஸ்லீம்களுக்கு சிறுபான்மை நல ஆணையத்தின் பரிந்துரைப்படி சிறு தொழில் தொடங்க மற்றும் ஆட்டோ வழங்க தாட்கோ மூலமாக வழங்கப்படும் கடனுக்கு வட்டியை அரவே நீக்கப்பட வேண்டும்
4. பல ஆயிரம் கோடிக்கு மேற்பட்ட வக்ஃபு சொத்துக்களில் பெரும்பகுதி அரசியல்வாதிகளும், சமூக விரோதிகளும் சுருட்டி விட்டனா;. வக்ஃபு சொத்து ஆக்கிரமிப்புக்கு முத்தவல்லிகளும் வக்.ஃபு அதிகாரிகளும் வக்ஃபு வாரியத் தலைவரும் காரணமாக உள்ளனா;. எனவே வக்ஃபு வாரியத்தின் மூலம் முஸ்லீம்களுக்கு எந்த நன்மையும் இல்லை. எனவே வக்ஃபு வாரியம் கலைக்கப்படவேண்டும். மேலும் வக்ஃபு வாரியத் தலைவர்களை ஆளும் கட்சியினா; நியமனம் செய்வதை நிறுத்தி விட்டு பள்ளிவாசல்கள் முத்தவல்லிகள் மூலமாக ஓட்டுப்போட்டு தெர்ந்தெடுக்கவேண்டும்.
5. நெல்லை மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக் கழக ஆட்சி மன்ற குழுவில் முஸ்லீம்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும். போன்ற கோரிக்கைகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ன் மாவட்ட அரசு நலத்திட்ட செயலாளார் சகோ.சுலைமான் அவர்கள் கலந்து கொண்டு முஸ்லீம் சமுதாயத்திற்கான கோரிக்கைகளை ஆணையத்திற்கு முன்பாக பதிவு செய்தார்.
அதன் பின்னர் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் வின்சென்ட் சின்னத்துரை நிருபர்களிடம் கூறியதாவது முந்தைய ஆட்சிக் காலத்தில் மாணவ, மாணவியருக்கு ரூ. 1 கோடி கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. இந்த ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் சிறுபான்மை மாணவார்களுக்கு கல்வி உதவித்தொகை ரூ. 40 கோடி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் 3.5 சதவீதம் உள் இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயா;த்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதேபோல் மனோன்மனியம் சுநதரனார் பல்கலைக்கழகம் சிறுபான்மையினருக்கு பிரதிநிதித்துவம் வேண்டும் என மனு கொடுத்துள்ளார்கள். மேலும் இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட அனைத்து கருத்துக்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடா;பாக சென்னையில் சிறுபான்மையினா; நல ஆணையக் கூட்டம் நடத்தப்படும்போது இங்கு பதிவு செய்யப்பட்ட அனைத்து கருத்துக்களும் விவாதித்து இட ஒதுக்கீடு உட்பட தகுதியான கருத்துக்களை சிறுபாண்மை நல ஆணையம், தமிழக அரசுக்கு பாpந்துரை செய்யப்படும் என்றார்;.
இந்தக் கலந்தாய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மற்றும் முஸ்லீம் லீக்கை, தவிர எந்த ஒரு இஸ்லாமிய அமைப்புகளும் கலந்து கொணடு தங்களின் கருத்துகளை பதிவு செய்யவில்லை என்பது குறிப்பி;டத்தக்கது.
No comments:
Post a Comment