அதில் எடுக்கபட்ட தீர்மானத்தின் அடிப்படையில் நகர நிர்வாகம் கலைக்கப்பட்டது, நிர்வாக வசதிக்காக கடையநல்லூரை நான்கு கிளைகளாக பிரிப்பது என்ற தீர்மானத்தின் அடிப்படையில் மக்கா நகர், பேட்டை, ரஹ்மானியபுரம் ஆகிய பகுதிகளில் தவ்ஹித் ஜமா அத்தின் கிளைகள் துவங்கப்பட்டது.
இன்று காலை AKN திருமண மண்டபத்தில் கடையநல்லூர் நகர்பகுதி நிர்வாக தேர்வு நடைபெற்றது, இதில் மாநில தணிக்கை குழு உறுப்பினர் அப்துல் ரஹ்மான் பிர்தவ்சி அவர்கள் தலைமை தாங்கினார், மாவட்ட தலைவர் யூசுப் அலி, மாவட்ட செயலாளர் செய்யது அலி, மாவட்ட பொருளாளர் நேஷனல் சாகுல், அரசு நலத் திட்டஉதவிகள் மாவட்ட செயலாளர் குறிச்சிகுளசுலைமான், மாவட்ட துணை செயலாளர் அச்சன்புதூர் சுலைமான் ஆகியோர் முன்னிலை வகுத்தனர்.
புதிதாக கடையநல்லூர் நகர தலைவராக கலந்தரி அய்யூப் கான், செயலாளர் பாவோடி ஹாஜா மைதீன், பொருளாளர் அச்சுக்கட்டி அஹம்மது அலி, துணை தலைவர் கார்தரவன் சித்திக், துணை செயலாளர் முசாஅப்துல்காதர், ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டது. பழைய நிர்வாகிகள் முகம்மது கோரி, முகம்மது காசிம், பாவா, சேகனா, ஆகியோர் வகித்து வந்த நகர பொறுப்புகளில் இருந்து இன்று முதல் விடுவிக்கப்படுகிறார்கள். பொது மக்கள் புதிய நிர்வாகிகளுக்கு முழு ஒத்துழைப்பு தருமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
இவன்
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத்
No comments:
Post a Comment