தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்-2011
கடையநல்லூர் தொகுதி – ஓர் பார்வை
1967ம் ஆண்டுகடையநல்லூர் தொகுதி சந்தித்த முதல் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக மஜீத் களமிறங்கினார். இந்தத் தேர்தலில் 446 ஓட்டுகள் வித்தியாசத்தில் சுயேட்சை வேட்பாளருக்கு வெற்றியை அளித்தனர்தொகுதிவாசிகள். சுப்பையா முதலியார் கடையநல்லூரின் முதல் எம்எல்ஏ என்ற பெருமையைப் பெற்றார்.
1971ல் இம்முறை திமுக சார்பில் மீண்டும் களமிறங்கிய சுப்பையா முதலியார் 2வது முறையாகவும் எம்எல்ஏ ஆனார். காங்கிரஸ் வேட்பாளர் மஜீத் இம்முறையும் தோல்வியடைந்தார். 1977ல் நடந்த தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ரசாக்,காங்கிரஸ் வேட்பாளர் ராமச்சந்திரனை வீழ்த்தினார். தொடர்ச்சியாக மூன்று தேர்தல்களில் காங்கிரஸ் இத்தொகுதியில் தோல்வியடைந்தது.
1980ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுகவை எதிர்த்துப் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் சாகுல்அமீது வெற்றிபெற்றார். அதிமுக வேட்பாளர் கனி தோல்வியடைந்தார். 1984ம் ஆண்டு முதன்முறையாக திமுக, அதிமுக நேருக்குநேர் மோதியது. இதில் அதிமுக வேட்பாளர் பெருமாள் வெற்றி பெற்றார்.
1989ல் நடந்த தேர்தலில் திமுக வேட்பாளராக மீண்டும் கதிரவன் களமிறங்கினார். கடையநல்லூரில் இரண்டு முறை வெற்றியை ருசித்த அதிமுக ஜெ, ஜா என இரண்டு அணிகளாக இத்தேர்தலில் போட்டியிட்டதால், அதன் வேட்பாளர்கள் மூன்றாம், நான்காம் இடத்திற்குத் தள்ளப்பட்டனர். காங்கிரஸ் வேட்பாளர் அய்யாத்துரையை எளிதாக வீழ்த்தி திமுக வேட்பாளர் கதிரவன் எம்எல்ஏவாக தேர்வு பெற்று சட்டமன்றத்தில் கொறடாவாக பணியாற்றினார்.
1991 தேர்தலிலும் அதிமுக & திமுக நேருக்கு நேர் களம் கண்டன. இம்முறை அதிமுக ஜெ, ஜா இரு அணிகளும் இணைந்திருந்தன. வலுவான அதிமுகவிடம் திமுக வேட்பாளர் கதிரவன் இம்முறை தோல்வியடைந்தார். நாகூர்மீரான் மூலம் மூன்றாவது முறையாக அதிமுக வெற்றிபெற்றது. இதன்மூலம் கடையநல்லூர் தொகுதிக்கு முதன்முதலாக அமைச்சர் அந்தஸ்தும் கிட்டியது. 1996ல் நடந்த தேர்தலில் 3வது முறையாக அதிமுக & திமுக நேருக்கு நேர் மோதியது. திமுக வேட்பாளர் நைனாமுகமது அதிமுக வேட்பாளரை எளிதாக வீழ்த்தினர். மூன்றாவது முறையாக திமுக இங்கு வெற்றியை ருசித்தது.

2001 தேர்தலில் அதிமுக வேட்பாளர் சுப்பையாபாண்டியன், திமுக வேட்பாளர் ஷாகுலை வீழ்த்தினார். 2006 தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரசுக்குக் கடையநல்லூர் தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்தத் தொகுதியில் முதல் முறையாக காங்கிரஸ் கூட்டணி பலத்தில் கால் பதித்தது. தென்காசி தொகுதியில் 3 முறை எம்எல்ஏவாக இருந்த பீட்டர் அல்போன்ஸ் கடையநல்லூர் தொகுதியில் வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் கமாலுதீன் காங்கிரசிடம் தோல்வியைத் தழுவினார். 4 முறை வெற்றி பெற்ற அதிமுகவால் தொகுதியைத் தக்கவைக்க முடியவில்லை.
கடையநல்லூரில் திமுக, அதிமுக, மாறி மாறி போட்டியிட்ட போதிலும் ஒரு தேர்தலில் வெற்றிபெற்ற அணியால் அடுத்த தேர்தலில் வாகை சூட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சுப்பையா முதலியார் தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்றாலும் ஒரு முறை சுயேட்சையாகவும், மறுமுறை திமுக சார்பிலும் களமிறங்கி வென்றார்.
கடந்த சட்டசபை தேர்தலைப் போல இந்தத் தேர்தலிலும் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ்தான் இங்கு போட்டியிடுகிறது. அதிமுக கூட்டணியில் அதிமுகவே நேரடியாக களமிறங்குகிறது. அக்கட்சி சார்பாக, பி. செந்தூர்பாண்டியன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.அத்தோடு, எஸ்.டி.பி.ஐ என்ற பெயரில் செயல்படும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அரசியல் கட்சியும் இத்தொகுதியில் தன் கட்சி சார்பாக நெல்லை முபாரக் என்பவரை வேட்பாளராக அறிவித்துள்ளது.

தொகுதி வாக்களர் எண்ணிக்கை: ஆண்கள் -1,05,681 பெண்கள் – 1,03,765 மொத்தம் – 2,09,446
மறு சீரமைப்பில் இடம்பெற்ற பகுதிகள்
தொகுதி மறுசீரமைப்பில் கடையநல்லூர் தொகுதியில்செங்கோட்டை தாலுகா, தென்காசி தாலுகா (பகுதி) சொக்கம்பட்டி,போகநல்லூர், கம்பனேரி, புதுக்குடி, கனகசபாபதிபேரி, பொய்கை,ஊர்மேலழகியான், கிளாங்காடு, நயினாரகரம், இடைகால், காசிதர்மம் மற்றும் கொடிக்குறிச்சி கிராமங்கள். கடையநல்லூர் நகராட்சி,சாம்பவர்வடகரை, ஆய்க்குடி ஆகிய பேரூராட்சிகள் இடம்பெற்றுள்ளன.

தேர்தல் களம்:2011
தொகுதி தேர்தல் அலுவலர்:
திரு.V.சந்திரன்
நேர்முக உதவியாளர்(கூடுதல்),மாவட்ட ஆட்சியர்
அலுவலக எண்: 0462 2501032
ஃபேக்ஸ் எண்: 0462 2500224
மொபைல் எண்: 94864 17375 / 75987 05608
மாவட்ட தலைமை தேர்தல் அலுவலகம்- 1800425 7041 (TOLL FREE Number)
தொகுதி தேர்தல் பார்வையாளர் – தீகா ராம் மீனா (G13817)- 75987 00229
காங்கிரஸ் வேட்பாளர்:
திரு.பீட்டர் அல்ஃபோன்ஸ்
த/பெ.சுவாமிநாதன்
45A,மேல ஆவணி மூல வீதி,
தென்காசி.
இவரதுவிபரம் மற்றும் சொத்துமதிப்பு குறித்து அறிய
அதிமுக வேட்பாளர்:
திரு.செந்தூர் பாண்டியன்
த/பெ.பூலியப்ப தலிவனார்
59,இராமசாமி தெரு
செங்கோட்டை டவுண்
இவரதுவிபரம் மற்றும் சொத்துமதிப்பு குறித்து அறிய
இந்திய சமூக ஜனநாயக கட்சி வேட்பாளர்
திரு.V.M.S.முகம்மது முபாரக்
த/பெ.V.M.ஷாகுல் ஹமீது
5/121,சப்பாணி ஆலீம் கீழத்தெரு
மேலப்பாளையம்,பாளை தாலுகா.
இவரதுவிபரம் மற்றும் சொத்துமதிப்பு குறித்து அறிய
No comments:
Post a Comment