கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jul 30, 2011

சுயலாபத்திற்க்காக ஜமாஅத்தை பயன்படுத்திய ஸைஃபுல்லாஹ்


சைபுல்லாஹ் ஹாஜாவின் திருகுதாளங்கள் தொடரில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் முன்னால் மாநில நிர்வாகிய இருந்த சைபுல்லாஹ் ஹாஜா அவரின் சில சுயநல நடவடிக்கைகளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து நீக்கப்பட்டார்.


அதனைத் தொடர்ந்து தன் செயல்களை நியாயப்படுத்திக் கொள்வதறகாக வேண்டி சைபுல்லாஹ் ஹாஜா தர்பியா என்ற பெயரில் நடத்திய நிகழ்ச்சியில் அவர் எடுத்து வைத்த சொத்தை வாதங்கள் அனைத்தையும் தவிடு பொடியாக்கியது அப்துந்நாசர் மற்றும் அப்துர்ரஹ்மான் பிர்தவ்ஸியின் விளக்கங்கள்.



அதுமட்டுமில்லாமல் இவர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைப் பயன்படுத்தி அரசியல்வாதிகளிடம் சுயலாபங்கள் அடைந்தது சம்பந்தமாகவும் அவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருந்தது. அதற்கு விளக்கம் தருகிறேன் பேர்வழி என்று நினைத்துக் கொண்டு அவர் செய்த சில விசயங்களை நியாயப்படுத்தி, மற்றைய சில விசயங்களை இருட்டடிப்பு செய்து விட்டார் சைபுல்லாஹ்.


முபாரக் பள்ளியைத் தவிர நான் வேறு எங்கும் ஜூமுஆவிற்கு போக மாட்டேன்,அதுபோல வேறு யாரும் இந்தப் பள்ளிக்கு ஜூமுஆவிற்கு வரக்கூடாது என்ற கட்டுப்பாடுகளை வைத்துக் கொண்டு சுயாட்சி நடத்தி வந்தார் சைபுல்லா. இது சம்பந்தமாக அவரிடம் மக்கள் கேட்ட போது, “ஏன்
மேலப்பாளையத்தில் மஸ்ஜித் ரஹ்மான் பள்ளியில் லுஹாவைத் தவிர வேறு யாரும் ஜூமுஆ செய்ய முடியுமா?” அல்தாபி மேலப்பாளையத்திற்குள் நுழைய முடியுமா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.


சம்சுல்லுஹாவைப் பொருத்தவரை அவர் மேலப்பாளையம் மஸ்ஜித் ரஹ்மான் பள்ளியில் இமாமாக இருக்கிறார். அதற்காக அவர் சம்பளமும் பெற்றுக்கொள்கிறார். ஆக லுஹா அவர்கள் மேலப்பாளையம் பள்ளியில் இமாமாக இருப்பதால் அவர் வெளியிடங்களுக்கு ஜூமுஆ செல்வது குறைவு. ஆனாலும் மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை வெளியிடங்களுக்கு ஜூமுஆவிற்கு சென்று வருகிறார். ஆனால் சைபுல்லா முபாரக் பள்ளிக்கு இமாம் அல்ல. ஆனால் நான் வேறு எங்கேயும் ஜூமுஆவிற்கு செல்ல மாட்டேன் என்று மறுக்கிறார்.


அடுத்து அல்தாபி மேலப்பாளையத்திற்குள் நுழைய முடியுமா? என்று ஒரு சிறுபிள்ளைத் தனமான கேள்வியைக் கேட்டிருக்கிறார். பாவம் சைபுல்லா வரலாற்றை மறைக்கப் பார்க்கிறார்.


மேலும் நான் மட்டுமா கட்டுப்பட மறுக்கிறேன், அப்துர்ரஹ்மான் பிர்தவ்ஸி மறுக்கவில்லையா?அவரை நம்பி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தால் அவர் கடைசி நேரத்தில் வயிற்று வலி என்று சொல்லி செல்ல மறுத்துவிடுவார் என்றும் குற்றம் சாட்டியிருக்கிறார்.


இதுகுறித்த மேலும் விவரங்களுக்கும் விளக்கங்களுக்கும் வீடியோவைக் காண்க.
http://onlinepj.com/vimarsanangal/ithara_vimarasanagal/Ssuvin-tiruhu-thaalangal-6/

No comments: