அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அமீரக கடையநல்லூர் TNTJ ஆலோசனைக் கூட்டம் கடந்த 01/07/2011 அன்று துபை TNTJ மர்கஸில வைத்து துணைத்தலைவர் சகோ.சாதிக் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இதில் தாயகத்தில் இருந்து வருகை தந்த துபை மண்டல TNTJ தலைவர் சகோ.முஹம்மது நாசிர் அவர்கள் ஊரில் நடைபெறும் பணிகள் குறித்து வந்த்திருந்த சகோதரர்களிடம் விளக்கினார்.இதில் அமீரகத்தின் அனைத்துப் பகுதியிலும் இருந்து சகோதரர்கள் கலந்து கொண்டனர்.
ஆலோசிக்கப்பட்ட விசயங்கள்:
1.எதிர்வரும் ரமலானில் நமதூரில் உள்ள TNTJ மர்கஸ்களுக்கு தலைமையிடம் தாயிக்களை வேண்டுவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
2.ரமலான் இஃப்தார் கஞ்சி,ஃபித்ரா வகைக்கு சகோதரர்களிடம் வசூல் செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.இதற்கு பகுதிவாரியாக பொறுப்பாளர்கள் கீழ்கண்டவாறு நியமிக்கப்பட்டனர்.
அபுதாபி - ஆதலெப்பை அப்துஸ் ஸலாம்
துபை: தேரா: ஆதலெப்பை இபுறாஹிம்,கம்புளி இஸ்மாயில்
ஹோர் அல் அன்ஸ்: மக்கட்டி முஹம்மது அலி, காதர்தரகன் இஸ்ஹாக்
ஜெபல் அலி : சேப்பிள்ளை ஜபருல்லாஹ்
சோனாப்பூர் : தாவூத்(பேட்டை) , தங்கப்பளாச்சி மசூது
ஷார்ஜா : கச்சி இபுறாஹிம்
அஜ்மான்: பெரிய முஸ்தஃபா சாதிக்
அல் அய்ன்: சேயன் மசூது
3.மர்கஸ் பொருப்பாளருக்கான ஊதியம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
4.மாற்றுமத சகோதரர்களுக்கான கட்டுரைப்போட்டி தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
5.SSU உணர்வு இதழின் 15 தீர்மானங்கள் குறித்து பேசியதற்கு தலைமை மூலம் பதிலளிக்கச் செய்வது குறித்து பேசப்பட்டது.
No comments:
Post a Comment