அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 22-07-2011 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜி்த்தாவாழ் கடையநல்லூர் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம். தலைவர் அப்துல் காதர் தலைமையில் நடைபெற்றது. இது கடந்த பொதுக்குழுவில் தேர்ந்தெடுத்த புதிய உறுப்பினர்களுக்கான பணிகள் விரிவாக விளக்கப்பட்டு அவர்களின் கையொப்பம் பெறப்பட்டது. இதில் ஆலோசனை குழுவிற்க்கு 5 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் ரமலான் ஃபி்த்ரா வசூல் விபரம் பேசப்பட்டது. கடையநல்லூரில் இயங்கிக் கொண்டிருக்கும். கிளைகளைப் பற்றிய விபரங்கள் அவர்களுக்கு நமது உதவிகள்,ஆலோசனைகள், கோரிக்கைகள் பற்றி விரிவாக பேசப்பட்டு அவர்களுக்கும் தெரிவிக்க முடிவு செய்யப்பட்டது. இதில் நிர்வாகிகள் மற்றும் ஆலோசகர்களும் கலந்து கொண்டனர். துஆவுடன் நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment