தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் மாநகர ரஹ்மானியாபுரம் கிளையில் 2.10.2011 அன்று ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு மரியம் பள்ளிவாசலில் வைத்து மாவட்ட தலைவர் மற்றும் நிர்வாகிகள் தலைமையில் அவசர பொதுக்குழு நடைபெற்றது. இதில் கிளைத்லைவர் சகோ.செய்யது மசூது, மாநில பேச்சாளர் சகோ.அப்துந் நாசிர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சகோ. அப்துர் ரஹ்மான் ஃபிர்தௌசி அவர்கள் நிர்வாக ஒற்றுமை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். தனது உரையில் நிர்வாகிகள் உழைப்பு இந்த தாஃவா பணிக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது, இந்த பணியை கையில் எடுத்தால் எவ்வளவு பிரச்சினையை சந்திக்க நேரிடும் என்றும், மனம் தளராமல் நமது பணியையும், நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை செய்து எவ்வாறு செயல்படுவது என்பதைப் பற்றியும் மிகவும் தெளிவாக எடுத்துரைத்தார்.தொடர்ந்து உறுப்பி்னர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு மிகத்தெளிவாக பதில் உரைத்தார்கள்.அதனை தொடர்ந்து சகோ.அப்துந் நாசிர் தனது உரையில் இந்த மரியம் பள்ளிவாசல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரஹ்மானியாபுரம் கிளைக்கு உரியது தான் என்று ஆணித்தரமாக சூழுரைத்தார்.துஆவுக்கு பின் கூட்டம் இனிதே நிறைவுற்றது.அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment