நாளுக்கு நாள் கடையநல்லூரில் திருமணத்தால் நடைபெறும் அனாச்சாரங்கள் பெருகிக் கொண்டேதான் செல்கின்றன. ஆடம்பரங்களும், ஷிர்க்கான காரியங்களும் பெருக்கெடுக்கின்றன.
குழந்தை பாக்கியத்தை வேண்டி பந்தல்களில் வாழைக்குலையை கட்டிவைத்திருக்கும் காட்சியைப் பாருங்கள். படைத்த இறைவனிடம் கையேந்த வேண்டிய சமுதாயம் வாழைமரங்களை கடவுளாக வணங்கிக் கொண்டிருக்கின்றது. அலை அலையாய் இளைஞர்கள் கூட்டம் இத்தகைய அனாச்சாரத் திருமணங்களில் அலைமோதுகிறது. மீண்டும் நம்முடைய கடையநல்லூர் இணைவைப்புக் கலாச்சாரத்தை நோக்கி படையெடுக்கின்றதோ என்கின்ற அச்சம் நம்முடைய உள்ளத்தை பதைபதைக்கச் செய்கின்றது. (அல்லாஹ் இத்தகைய நிலையை விட்டும் நமதூரைக் காப்பாற்ற வேண்டும்) அஸ்ஹாபுல் கஹ்ஃப் (குகைத் தோழர்கள்) போன்று ஓரிறைக் கொள்கை ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் மனவலிமை கொண்ட இளைஞர்களால் மட்டுமே இத்தகைய வழிகேடுகளுக்கு எதிராக களமிறங்க இயலும். அல்லாஹ் குகைத் தோழர்களைப் போன்று ஓரிறைக் கொள்கைக்காக பாடுபட்டு நம்மால் இயன்ற வரை நல்லூர் நகரில் சத்தியக் கொள்கையை எடுத்தியம்பும் மனவலிமையை நமக்கு தந்தருள வேண்டும். இத்தகைய அநியாயங்களுக்கு எதிராக சத்தியத்தை பிரச்சாரம் செய்வதற்கு இளைஞர்கள் ஓரணியில் திரளவேண்டும். அத்தகைய இளைஞர்கள் நல்லூர் நகரில் ஒன்று திரள்வார்களா?

No comments:
Post a Comment