கடையநல்லூர் இல்லத்தார் தெருவைச் சார்ந்த ஒரு இஸ்லாமிய சகோதரர் தன்னுடைய காலில் ஏற்பட்ட வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருடைய கால் விரலை அகற்ற வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள அந்த சகோதரரின் மருத்துவச் சிகிச்சைக்காக 21.10.2011 வெள்ளிக் கிழமை அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் டவுண் கிளையின் சார்பாக ரூபாய் 3,015 வழங்கப்பட்டது. இதனை டவுண் கிளை தலைவர் சகோதரர் அய்யூப் வழங்கினார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்காக தவ்ஹீத் ஜமாஅத் கேட்கும் போதெல்லாம் வாரிவழங்கும் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்காக அனைவரும் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுமாறு வேண்டிக் கொள்கிறோம். அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment