தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமீரக வாழ் கடையநல்லூர் சகோதரர்களின் மாதந்திர ஆலோசனை கூட்டம் 14/10/11 அன்று மாலை 5.00 மணிக்கு துபை TNTJ மர்கஸில் வைத்து சகோ. சாதிக் அலி அவர்கள் தலைமையில் நடைபெற்றது .இதில் சகோ.முஹம்மத் அலி அவர்கள் ஏகத்துவ பிரச்சாரத்தை கடையநல்லூரில் இன்னும் வீரியமாக எப்படி கொண்டு செல்லுவது,மற்றும் அதற்கான வழிமுறைகள் குறித்து துவக்க உரை நிகழ்த்தினார்.அதைத் தொடர்ந்து சகோதரர்களின் ஆலோசனைப்படி கீழ்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள்:
1. கூட்டு குர்பானி சம்பந்தமாக ஆலோசனை செய்யப்பட்டது ,
2. குர்பானி ஆட்டிற்கு ரூபாய் 8000(650 திர்ஹம்) என்றும், மாடு ஒரு பங்கிற்கு ருபாய் 2000(160 திர்ஹம்) வசூலிப்பது என்றும் தீர்மானிக்க பட்டது,
3, மக்களிடம் குர்பானி மற்றும் தோல்களை வசூல் செய்வது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஊரில் தெருமுனைப் பிரச்சாரம் , போஸ்டர் ,பேனர்,ஜும்மா பேருரை ஆகிய வழிகளில் செய்யுமாறு கடையநல்லூரில் உள்ள கிளைகளுக்கு ஆலோசனையாக வழங்குவது என்றும் தீர்மனிக்கபட்டது.
4, தலைமையின் அறிவுறுத்தல் மற்றும் விதிமுறை படி அமீரக வாழ் கடையநல்லூர் கிளையின் புதிய நிர்வாகபொறுப்பாளர்கள் தேர்வு வரும் ஜனவரி 2012 இரண்டாவது வாரம் தேர்தெடுப்பது என்றும் தீர்மானிக்க பட்டது,
5, மாற்றுமத சகோதர்களுக்கு கட்டுரை போட்டி நடத்துவது குறித்து நமது ஊரில் உள்ள கிளைகள் காலதாமதம் செய்யாமல் உடனே அனைத்து கிளைகளின் ஆலோசனையை நடத்தி அதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு கேட்டுக் கொள்வது
6, மாற்றுமத சகோதர்களுக்கு கட்டுரை போட்டி நடத்துவதற்கு கீழ் காணும் சகோதர்களை பொறுப்பாளர்களாக நியமித்து செயல்படுத்துமாறு ஆலோசனை வழங்கபடுகிறது, அதன்படி அமீரக கிளை சார்பில் கீழ்காணும் சகோதரர்களை பரிந்துரைப்பது
சகோ.பாவோடி காஜா (டவுன் கிளை )
சகோ.மசூது சாஹிப் (மரியம் கிளை )
சகோ.ஜாகிர் (மக்கா நகர்)
சகோ.பிலால் (பேட்டை )
7,மேலும் நமதூரில் நடைபெறும் தெருமுனை பிரசாரத்திற்கு இஸ்லாமியக் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தாயிக்களையும் அழைத்து பிரச்சாரத்தை வீரியப்படுத்துமாறு நமது ஊர் கிளை நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்குவது
என தீர்மானிக்கப்பட்டது.
No comments:
Post a Comment