ஏக இறைவனின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மக்கா நகர் கிளை சார்பில் சில நாட்களுக்கு முன்னர் ராஜா என்ற சகோதரருக்கு இஸ்லாமிய கொள்கைகள் எடுத்துரைக்கப்பட்டு புத்தகங்கள்,DVD க்கள் வழங்கப்பட்டது. அதனை படித்துப் பார்த்த பின்னர் அந்த சகோதரர் மக்கா நகர் கிளை நிர்வாகிகளை தொடர்பு கொண்டு நான் இஸ்லாத்தை தழுவ வேண்டும் என்று என்று கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் 24.02.12அன்று ரஹ்மானியாபுரம் 2 வது தெருவில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சார கூட்டம் முடிந்த பிறகு மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் சகோ.M.S.சுலைமான் அவர்கள் முன்னிலையில் அவர் ஏகத்துவ கலிமாவை மொழிந்து தூய இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை ராஜா முஹம்மது என்று மாற்றிக் கொண்டார். கூட்டத்தில் கலந்து கொண்டசகோதரர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!!!
No comments:
Post a Comment