கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Feb 25, 2012

தெருமுனைப் பிரச்சாரம் - ரஹ்மானியாபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரஹ்மானியாபுரம் கிளையில் 24-02-12 அன்று மஃரிப் தொழுகைக்கு பின் தெருமுனைப் பிரச்சாரம் ரஹ்மானியாபுரம் 2 வது தெருவில் நடந்தது.மாவட்ட துணை செயலாளர் சுலைமான், மாவட்ட செய்தி தொடர்பாளர் குறிச்சி சுலைமான் ரஹ்மானியாபுரம் கிளை நிர்வாகிகள் முன்னிலையில் துபை மண்டல TNTJ இணைச்செயலாளர் சகோதரர்.இபுராஹிம் அவர்கள் துவக்க உரையாக சமுதாய சீர்கேட்டைப் பற்றி எடுத்துரைத்தார். மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் சகோதரர் M.S. சுலைமான் அவர்கள் பெண்களின் இன்றைய நிலையையும் ,இன்றைய சமுதாயத்தின் நிலையையும் விரிவாக விளக்கினார்.அவரது உரையில்”மவ்லூது ஓதுவதற்கு பணம் கொடுக்கவில்லை என்று நமது ரஹ்மானியாபுரம் கிளை நிர்வாகிகளை ஊர் நீக்கம் செய்தார்கள்,இதுபோல் நஜாத்காரர்கள் வீட்டின் மைய்யத்தை அடக்கம் செய்வதற்கு இடம் தரமாட்டோம் என்று நீங்கள் சொல்லிப்பாருங்கள் அதனை அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு முறியடிப்போம்” என்று ஜமாத்தார்களுக்கு எச்சரிக்கையும் செய்தார். ரஹ்மானியாபுரம் கிளை நிர்வாகிகள் இந்நிகழ்ச்சிக்கு பொதுக் கூட்டம் அளவிற்கு ஏற்பாடுகள் செய்து இருந்தார்கள்.இதில் அதிகமான கொள்கை சகோதரர்கள்,பொது மக்களும் கலந்து கொண்டார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.





No comments: