கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Mar 21, 2012

சவுதியில் இறந்த சகோதரரின் உடல் மீட்பு

திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் அருகில் உள்ள கிராமம் கம்பனேரியை சார்ந்த மாற்று மாத சகோதரர் சவூதி அரேபியா தபூக் என்ற ஊரில் மரணம் அடைந்தார். அவரது உடலை தாயகம் அனுப்புமாறு இறந்தவரின் உறவினர்கள் TNTJ தபூக் கிளையை தொடர்பு கொண்டனர்.தபூக் கிளையில் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்ந்த சகோதரர் முஜாஹித் நமது ரஹ்மானியாபுரம் கிளை நிர்வாகிகளுக்கு தொடர்பு கொண்டு இறந்தவரின் உறவினர்களை அணுகுமாறு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் சகோதரர் பிலால் அவர்களின் உதவிவுடன் கம்பனேரி கிராமத்திற்கு சென்று உறவினர்களிடம் ஆலோசித்து நமது நிர்வாகிகள் அவரது உடலை கொண்டுவருவதற்கு தேவையான கோப்புகளை தயார் செய்து தபூக் கிளையின் செயலாளர் அஜிஸ்,சகோதரர் முஜாஹித் ஆகியோருக்கு அனுப்பி வைத்தனர். அதனை பெற்றுக் கொண்டு தபூக் கிளையின் நிர்வாகிகள் மிக விரைவாக  செயல்பட்டு இறந்தவரின் உடலை மீட்டு தாயகம் அனுப்பி வைத்தார்கள்.சவுதியிலிருந்து கேரளா கொச்சி விமான நிலையத்திற்கு வந்த பிரேதம் நமது ஜமாஅத் ஆம்புலன்ஸ் மூலமாக கடையநல்லூர் கொண்டு வரப்பட்டு கடையநல்லூர் அனைத்து கிளை நிர்வாகிகள் முன்னிலையில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கான செலவீனங்களை சவுதி அரேபியா தபூக் கிளையும்,கடையநல்லூர் TNTJ அனைத்து கிளைகளும் ஏற்றுக் கொண்டன. இறந்தவரின் உறவினர்கள் மதங்களைக் கடந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மனிதநேய உதவியினைக் கண்டு வியந்தனர்.அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். 

No comments: