அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் கிளைகளின் சார்பில் நகராட்சியின் சுகாதார சீர்கேட்டை கண்டித்தும்,பாதுகாப்பான,சீரான குடிநீர் விநியோகம் கோரியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 26.03.2012 அன்று மாலை 5 மணியளவில் கடையநல்லூர் நகராட்சி பூங்கா அருகில் வைத்து நடைபெற்றது.மாவட்ட செயலாளர் சகோ.செய்யது அலி அவர்கள் ஆர்பாட்டத்தை கோஷமிட்டு துவக்கி வைத்தார்.மாநில பேச்சாளர் சகோ.அப்துன் நாஸிர் மற்றும் மாவட்ட, கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.இறுதியில் கண்டன உரை நிகழ்த்திய மாநில மேலாண்மைக் குழு உறுப்பினர் சகோ.ஹாஜா நூஹ் அவர்கள் தனது உரையில் “கடையநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதார சீர்கேட்டினால் ஏற்படுகின்ற அவலங்களை எடுத்துரைத்தார். இது போன்ற அவலங்கள் தொடர்ந்தால் மக்களைத் திரட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலம் ஸ்தம்பிக்கும் அளவிற்கு மாபெரும் முற்றுகை போராட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் என்று எச்சரிக்கை விடுத்தார்.அல்லாஹ்வின் அருளால் ஆர்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது.
ஆர்பாட்டத்தின் இறுதியில் சகோ.ஹாஜா நூஹ் அவர்களின் தலைமையிலான குழுவினர் நகராட்சி மன்றத்திற்கு சென்று ஆர்பாட்ட கோரிக்கைகளை புகாராக ஆணையாளர் மற்றும் நகர்மன்ற தலைவர் ஆகியோர் இல்லாத காரணத்தால் நகராட்சி மேலாளரிடம் அளித்தனர்.
கோரிக்கை மனு:
இந்த நகரத்தில் மர்மக்காய்ச்சல்,டெங்குக் காய்ச்சால்,வைரஸ் காய்ச்சல் இன்னும் பலவிதமான நோய்கள் சுகாதார சீர்கேட்டால் பல ஆண்டுகளாக பரவிக் கொண்டு இருக்கிறது. இது குறித்து பலமுறை சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும், நகராட்சி நிர்வாகத்திற்கும் வாய்மொழியாகவும், எழுத்துமூலமாகவும் புகார் அளித்து உள்ளோம்.ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் எடுக்கப்படவில்லை. இன்றுவரை மக்கள் குறிப்பிட்ட நோய்களினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆகையால் இன்று 26.03.2012 திங்கட் கிழமை மாலை 4 மணியளவில் நகராட்சியின் கவனத்தை ஈர்க்கும் விதமாக மாபெரும் கண்டன ஆர்பாட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மிகவலிமையாக நடத்தியுள்ளோம்.எனவே இந்த சுகாதார சீர்கேட்டினால் ஏற்படும் நோய்களை ஒழிப்பதற்காக
Ø குடிநீர் திறக்கும் தொட்டியில் செத்த பன்றி போன்ற மக்களுக்கு கேடு தருகின்ற விசஜந்துகள்,விசக் கிருமிகள் விழாத வண்ணம் பாதுகாப்புடன் மக்களுக்கு தீங்குதராத ஆரோக்கியமான நல்மருந்து கலந்து தினமும் குடிநீர் வழங்க வேண்டும்
Ø நகர்முழுதும் கொசுத்தொல்லை அதிகமாக இருப்பதால் டெங்கு காய்ச்சல் போன்ற இனம்புரியாத நோய்களால் மக்கள் பாதிப்பிற்குள்ளாகின்றனர். இதனை தடுக்க தினந்தோறும் கொசு மருந்து அடிக்க வேண்டும். தேவைப்பட்டால் காலை,மாலை இருநேரங்களிலும் அடிக்க வேண்டும்
Ø செத்துப் போன, நாய்கடித்த ஆடுகளை அறுத்து விற்பனை செய்வது போன்ற மக்கள் நலனுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவோர் மீது நகர்மன்றம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இவ்விசயத்தில் நகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் சார்பில் உடனடியாக தலையிட்டு சட்டரீதியிலான நடவடிக்கையை அவர்கள் மீது எடுக்க வேண்டும்.
Ø பிறப்புச் சான்று,இறப்புச் சான்று,புதிய குடிநீர் இணைப்பு,புதியவீட்டிற்கான வரிவிதிப்பு உள்ளிட்டவைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் இலஞ்சம் வாங்குகிறார்கள்.பரவலாக மக்கள், சமுதாய தொண்டு செய்யும் எங்கள் அமைப்பிடம் இதை கூறி வருந்துகிறார்கள். இது போன்ற ஈனச்செயலை யார் செய்தாலும் அவர்களை தடுத்து நிறுத்தும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Ø கடையநல்லூர் நகரின் மக்கள் குடியிருப்புப் பகுதிகள் வெகுவாக விரிவடைந்து வருவதால் மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க்கும் வகையில் தீட்டப்பட்ட 22 கோடி ரூபாய் மதிப்பிலான குடிநீர் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இது போன்ற சுகாதார சீர்கேடுகள் மூலம் மக்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவார்களாயின் ஜனநாயக வழியில் மக்களை திரட்டி மாவட்ட ஆட்ச்சியர் அலௌவலகத்தை முற்றுகையிடவும் தயங்கமாட்டோம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment