ஏக இறைவனின் பேரருளால் கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளைகள் மற்றும் வளைகுடா வாழ் TNTJ சகோதரர்கள் இணைந்து நடத்திய ’இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்’ கேள்வி பதில் நிகழ்ச்சி மற்றும் இஸ்லாம் என் பார்வையில் கட்டுரை போட்டி பரிசளிப்பு நிகழச்சி 11.03.2012 அன்று AKN மஹாலில் வைத்து துபை மண்டல தஃவா அணிச் செயலாளர் சகோ.முஹம்மது அலி தலைமையில் மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது.முஸ்லிம் அல்லாத சகோதரர்களின் கேள்விகளுக்கு TNTJ மாநில பொதுச்செயலாளர் சகோ.ரஹ்மதுல்லாஹ் அவர்கள் சிறப்பான முறையில் பதிலளித்தார்.கேள்வி கேட்ட அனைவருக்கும் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகள் வழங்கப்பட்டது.அதனை தொடர்ந்து கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டவர்களில் சிறந்த கட்டுரைகள் தெரிவு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. சமூக நல்லிணக்கத்தை வளர்ப்பதற்காக இதுபோன்ற நிகழ்ச்சிகளை TNTJ தொடர்ந்து நடத்திட வேண்டும் என்று கலந்து கொண்ட நண்பர்கள் கருத்துத் தெரிவித்தனர்.மதிய உணவுடன் அமர்வு இனிதே நிறைவு பெற்றது.
சங்கரங்கோவில் இடைத்தேர்தலை முன்னிட்டு எந்தவித மெகா பேனர்,வால் போஸ்டர்,ஆட்டோ அறிவிப்புகளும் இல்லாமல் தனிநபர் சந்திப்புகள் மற்றும் பிட்நோட்டீஸ்கள் மூலம் குறுகிய கால இடைவெளியில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில் சகோதர சமுதாயத்தை சார்ந்தவர்கள் பெருமளவில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.சகோ.இபுறாஹிம் அவர்கள் தலைமையில் தொண்டர் அணியினர் சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்தனர். அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்
No comments:
Post a Comment