கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jun 25, 2012

திகைக்க வைக்கும் செக்ஸ் கொடுமைகள்

திகைக்க வைக்கும் செக்ஸ் கொடுமைகள்

அதிர்ச்சியானது..கவலைக்குறியது..அனைவரும் அறிந்துகொண்டு விழிப்புணர்வு அடையவேண்டியது...என்ன தெரியுமா?

-குழந்தைகளுக்கு எதிரானபாலியல் வன்முறை என்ற கொடுமை!

Ø 53 சதவீத குழந்தைகள் ஏதாவது ஒரு வகையில் பாலியல் பாத்காரதிற்கு உள்ளாக்கபடுகிறார்கள்.

Ø பாதிக்கபடுபவைகளில் பெண்குழந்தைகளை விட ஆண் குழந்தைகளின் சதவிகிதம் அதிகம்.

Ø பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்ப குழந்தைகளைவிட மேல்தட்டு மற்றும் நடுத்தர வருவாய் குழந்தைகள் பாதிக்கப்படுவது அதிகம்.

Ø ஒன்று முதல் 18 வயது வரை உள்ளவர்கள் இந்த பாதிப்பு பட்டியலில் இடபிடிக்கிறார்கள்.

Ø 5முதல் 12 வயது வரை உள்ளவர்கள் பாதிப்பின் உச்சம்.பாதிக்கப்பட்டவைகளில் 40 சதவீதம் இந்த வயது தான். 30 சதவீதம் பேர் 13-14 வயதினர்.

குழந்தைகளை பாலியல்பலாத்காரம் செய்கிறவர்கள்,பீடோபீலியா(PEADOPHILEA) என்ற வக்ரபுத்திகொண்டவர்கள்.இது ஒரு மன நோயாகவும் கருதப்படுகிறது.சிறுவர்-சிறுமியர்கள் மூலம் இன்பமடைய்யும் வக்கிரபுத்திகள் மேலைநாடுகளில் அதிகம்.சைல்டு செக்ஸ் டூரிசம் என்ற பெயரில் அவர்களை சில சமூகவிரோத அமைப்புகள் ஆசியநாடுகளுக்கு அழைத்து வருகின்றனர்.முன்பு தாய்லாந்து போன்ற நாடுகளில் கால்பதித்த இந்த பாதகர்கள் இப்போது இந்தியாவில் ஒடிசா,கோவா,மகாபலிபுரம்போன்ற இடங்களுக்கு ரகசியமாக வந்து ஆசைகளை தீர்த்துவிட்டு போகிறார்கள்.

இது தொடர்பான சமீபத்தய கணக்கெடுப்பு ஒன்று நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.பாலியல் தொழிலில் ஈடுபடுகிறவர்களில் 15 சதவீத்தினர் 15 வயதிற்கு குறைவானவர்களாக இருக்கிறார்கள்.25 சதவீத்தினர் 16முதல் 18 வயதிற்கு உட்பட்வர்கள்.2005-ம் ஆண்டு இந்தியாவில் 44,476 குழந்தைகள் காணாமல் போயிருக்கறார்கள்.அவைகளில் 11008 குழந்தைகள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை.இவர்கள் பாலியலுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

குழந்தைகளை எளிதாக ஏமாற்ற முடியும். குழந்தைகள் காட்டிக்கொடுக்காது.

--- குழந்தைகளுக்கு விளைவுகளை புரியத்தெரியாது.எதிர்ப்பு தெரிவிக்காது.

--- தனக்கு ஏற்பட்ட பாதிப்பை குழந்தைகளுக்கு விளக்கத்தெரியாது.விளக்கினாலும் பெற்றோர்கள்

அதை நம்பமாட்டார்கள்.

--- வயதானவர்கள் குழந்தைகளிடம் கொஞ்சும் பாவனையில் வக்கிர செயலில் ஈடுபடும்போது,பெற்றோருக்கு சந்தேகம் வராது.

--- ஆண்மை அதிகரிக்கும்,ஆயுள் நீடிக்கும்போன்ற மூடநம்பிக்கைகள்.

இப்படிப்பட்ட பல காரணங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துகொண்டுடே போகிறது.கற்பனைக்கு எட்டாவத்தில்கூடகுழந்தைகள் பாலியல்கலாத்காரதிற்கு உள்ளாக்கபடுகிறார்கள்.

குழந்தைகளுக்கு நன்கு தெரிந்த உறவினர்கள் அல்லது வீட்றேக அடிக்கடி வந்துசெல்கிறவர்கள்.பக்கத்துவீட்டுக்காரர்கள்,வேலைக்காரர்கள்,அம்மாவின்-அப்பாவின் நண்பர்களாக வந்துபோகிறவர்கள்,...போன்றவர்களால் பாதிக்கப்படும் குழந்தைக்களின் எண்ணிக்கை அதிகம்.புதிய நபர்களால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்க குறைவு.

பயணங்கள்.திருவிழா,திருமணவிழாக்களில் உருவாகும் மக்கள் நெருக்கடியை பயன்படுத்தி குழந்தைகளுக்கு பாலியல்தொந்தரவு தருபவர்களும் உண்டு.குழந்தை தொழிலாளர்கள்,தெருவோரகுழந்தைகள் இந்தபாதிப்பிற்கு

உள்ளாகுவது சாதாரணவிஷயமாக மாறிக்கொண்டிருக்கிறது.குழந்தைகள் இல்லங்கள்,அனாதை ஆசிரமங்கள்.ஒருசில பள்ளிக்கூடங்களும் இதற்கு விதிவலக்கல்ல.

பாலியல் பாலாத்காரத்தால் குழந்தைகளுக்கு பல்வேறு பாதிப்புக்கள் உருவாகின்றன.முதலாவதாக அவர்களுக்கு பாலியல்நோய்கள் உருவாவதை குறிப்படலாம்.குழந்தைகளின் உறுப்பு பகுதியில் புண்களோ.கட்டிகளோ,சீழ்வடிதல் இருந்தாலும் குழந்தையின்தாய்க்கு அது பால்வினை நோயின் அடையாளம் என்ற சந்தேகம் வருவதில்லை.ஒரு சில மருத்துவர்களும் அது பால்வினை நோயின்அறிகுறி என்பதை உணராமல்,வேறுவிதமான சிகிச்சைகளும் கொடுத்துவிடுவதும் உண்டு.

நன்றாக தெரிந்தவர்களால் குழந்தைகளுக்கு பாலியல் பாதிப்பு ஏற்படும்போது,அவைகளின் உடலில் காயங்களோ,.சிராய்ப்புகளோ இருப்பதில்லை.அதனால் பெற்றோரோ,மருத்துவர்களோ குழந்தை பலாத்காரத்திற்கு உட்பட்டிருக்கிறது என்று முதலில் நினைப்பதில்லை.அப்படியே நினைத்து விசாரித்தாலும் குழந்தையால் தனக்கு ஏற்பட்ட பாதிப்பை கூறமுடியாது.

வெளிநபர்களால் பாதிப்ப

எற்பட்டும்போது காயம்,சிராய்ப்பு,உறுப்பு பகுதியில் ரத்தம் வடிதல் போன்றவை காணப்படும்.அவசரத்திலும்,பயத்துடனும் அந்த பாதகர்கள் செயல்படுவதால் குழந்தைகள் காயம் அடைந்துவிடுகின்றன.பலாத்காரத்திற்க உட்பட்ட குழந்தைகள் மனம்ரீதியாகவும்,உடல்ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றன.பால்வினைநோய் மற்றும் காயங்களை சிகிச்சையால் குணபடத்திடலாம்.ஆனால் மனநிலை பாதிப்பால் பிற்காலத்தில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும்.வயதுக்கு மீறிய பாலியல் மாற்றங்கள்,மனச்சோர்வு,தாழ்வுமனப்பான்மை,எதைக்கண்டாலும்-யாரைக்கண்டாலும் பயம்.தனிமை மீது விருப்பம்,உணவில் நாட்டமின்மை,போதைமருந்திற்கு அடிமையாகுதல்,வீட்டை விட்டு ஓடுதல்,படிப்பில் ஆர்வமின்மை,பாலியல் தொழில் ஆர்வம் போன்றவை முக்கியமான எதிர்கால பாதிப்புகளாகும்.

மக்கள் விழிப்புணர்வு கொண்டால் மட்டுமே இந்த பாதகத்தை தடுக்கவோ,குறைக்கவோ முடியும்.சமுகத்தின் அடிப்படையிலிருந்து இந்த பணியை தொடங்கவேண்டும்.பள்ளிகள்,கல்லூரிகள்,மருத்துவதுறை,தன்னார்வ அமைப்புக்கள்,அரசு அமைப்புக்கள் ஆகிள அனைத்தும் இணைந்து விழிப்புணர்வு பிரசாரம் செய்யவேண்டும்.தங்கள் தம்பி தங்கைகளை காத்து கண்காணிக்க மூத்தகுழந்தைகளுக்கு கண்காணிக்க கற்றுக்கொடுக்க வேண்டும்.குழந்தைகளுக்கு எந்தஎந்த பகுதிகளில் தொட்டால் அது நல்லதோடுதல் ஆகும் என்றும்-எந்தேந்த பகுதிகளில் தொட்டால் தவரான அணுகுமுறை என்றும் சொல்லிதரவேண்டும்.இதைகரியாக சொல்லித்தர அம்மாக்களாலே முடியும்.

மற்றவர்களின் பிரச்சனைக்குறிய செயல்கள் பற்றியோ,பிரச்சனைக்குறிய நபர்கள்பற்றியோ குழந்தைகள் கூறினால் அதை அலட்சியபடுத்தாமல் கண்காணிக்கவேண்டும்.குழந்தைகளின் உடலிலில் ஏற்படும் மாற்றங்களைப் பார்த்து டாக்டரிடம் ஆலோசனை பெறவேண்டும் யாரையும் நம்பிகுழந்தைகளை விட்டுச்செல்லக்கூடாது.பொது இடங்களில் குழந்தைகளை ஜாக்கிறதையாக பார்த்துக்கொள்ள வேண்டும்.இந்தபாதகத்தில் ஈடுபடுகிறவர்களை நீதியின் முன்னே நிறுத்தப்பட்டு கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல்கொடுமை ஒரு தனிநபர் பிரச்சனையோ,பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்து பிரச்சனையோ இல்லை.இது ஒரு சமூகபிரச்சனை.அதனால் எல்லோரும் ஒன்றுபட்டு,ஒத்துழைத்து தடுக்கவேண்டும்.

கட்டுரை.. டாக்டர் என்.உஸ்மான் M.D..D.V..Ph.D..

(பாலியல் நோய் நிபுணர் மற்றும் உலக சுகாதார நிறுவன ஆலோசகர்).சென்னை.

இவண் ..நல்லூர் ஜபருல்லாஹ்

1 comment:

sheikfarith said...

jazakallah hairan good news