கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Aug 16, 2012

அசத்தியவாதிகளின் முகத்திரை மீண்டும் கிழிந்தது!!!


இன்று மாலை(16.08.2012) 4 மணியளவில் தென்காசி வட்டாட்சியர் அலுவலகத்தில் தென்காசி கோட்டாட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் திரு.பரமசிவன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கடையநல்லூர் காவல்துறை ஆய்வாளர் திரு.சபாபதி, துணை காவல்துறை ஆய்வாளர் திரு.சிவன்,கிராம நிர்வாக அலுவலர் திரு.வைத்தியலிங்கம் ஆகியோரின் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,மக்தும் தர்ஹா டிரஸ்டியினர் மற்றும் முபாரக் ஜமாத்தினர் கலந்து கொண்டனர்.
  • தவ்ஹீத் ஜமாஅத்  கடந்த ஆறு வருடங்களாக தொழுகை நடத்திவருகின்றது என்ற அடிப்படையில் தவ்ஹீத் ஜமாஅத் உரிமை கோரியது.
  • முபாரக் ஜமாத்தின் சார்பாக எங்க முத்தவலி? யை வைத்து தான் கடந்த பல வருடங்களாக திடலில் தொழுகை நடத்தியுள்ளோம் ஆகையால் எங்களுக்கு தான் தரவேண்டும் என்ற மறைக்க முடியாத மகா பொய்யின் மூலம் திடலில் தொழுகை நடத்த அனுமதி தரவேண்டும் என்றனர்.
  • தர்ஹாவினரோ எங்களுக்கு இப்போது தர்ஹாவோடு சேர்த்து பள்ளியும் உள்ளது ஆகையால் நாங்கள் தொழுகை நடத்துவதற்கு அனுமதி தரவேண்டும் என்றனர்.
இதில் கடந்த ஆறு வருடங்களாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தான் காயிதே மில்லத் திடலில் தொழுகை நடத்தி வருவது அனைவரும் அறிந்ததே!இந்த அடிப்படையில் காயிதே மில்லத் திடலில் தொழுகை நடத்துவதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு தான் முழு உரிமை உள்ளது என்பதை கருத்தில் கொண்டு பெருநாள் காலை 6:15 முதல் 7:30 வரை தவ்ஹீத் ஜமாஅத் தான் தொழுகை நடத்தும் என்ற அறிவிப்பின் மூலம் அசத்தியவாதிகளின் முகத்திரை மீண்டும் கிழிந்தது.புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே!




No comments: