டவுண் கிளை TNTJ மார்கஸில் வெளிநாடுவாழ் சகோதர்கள் சந்திப்பு !
வெளிநாட்டிலிருந்து ஊருக்கு பெருநாள் விடுமுறையில் வந்த சகோதரர்களின் சந்திப்பு டவுண் கிளை மர்கஸில் இன்று காலை 26.08 அன்று சரியாக காலை 11 மணியளவில் தொடங்கி மதியம் 1 மணி வரை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி டவுண் கிளை தலைவர் சகோ.அய்யுப் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. டவுண் கிளைக்கு மர்கஸ் அமைய இடம் வாங்குவது சம்பந்தமாக பேசப்பட்டது, தொடக்கமாக மவ்லவி முஹம்மது மைதீன் ஜமாலி அவர்கள் நாம் இந்த விசயத்திற்கு எவ்வாறு ஒன்றுபட் டு செயல்படவேண்டும் என்று விளக்கிப் பேசினார்.
சகோ.ஷம்சுதீன் அவர்கள் கடந்த ஒரு வருடகால பணிகளை தொகுத்து வழங்கினார்.சகோ அப்துஸ்ஸலாம் இடம் வாங்குவதற்கான அவசியத்தையும் அதனால் கிடைக்கும் மறுமை பயனை விளக்கிக் கூறினார்.
கலந்து கொண்ட சகோதரர் தங்கள் விடுமுறை கழிந்து சென்ற உடன் தாங்கள் சார்ந்த பகுதியில் இதற்காக நிதி திரட்டுவோம் என்று ஒப்புதல் வழங்கியுள்ளார்கள்.
இந்த நிகழ்ச்சியை வெளிநாட்டிலிருந்து விடுப்பில் வந்த சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர், நிர்வாகிகள் மிக சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.புகழ்அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே.
No comments:
Post a Comment