அல்லாஹ்வின் பேரருளால் கடையநல்லூர் டவுண் பெருநாள் தொழுகை திடல் விஷயமாக தென்காசி RTOவில் பீஸ் மீட்டிங் 22.10.2012 காலை 10 மணிக்கு நடைபெற்றது.இதில் எம்.எம்.ஜே கமிட்டி,மக்தூம் ஞனியார் தர்ஹா கமிட்டி,மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் டவுண் கிளை கலந்து தாங்களின் கருத்துக்களை கூறினார்கள். விசாரணையில் கருத்துக்களை கேட்ட RTO இறுதியில் கடந்த காலங்களில் நடந்து கொண்ட தீர்ப்பையே உறுதி செய்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் டவுண் கிளையின் கோரிக்கையில் நியாயம் இருப்பதை உணர்ந்த அதிகாரிகள். 27.10.2012 காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும்.
அதன் பின்னர் மற்ற இரண்டு ஜமாஅதார்கள் தொழுகை நடத்திக் கொள்ளவேண்டியது என்று தீர்ப்பு கூறினார். இதில் எம்.எம்.ஜே கமிட்டியினர் எப்போதும் போல் கையெழுத்துப்போடவில்லை. கோர்டில் சந்திப்பதாக சப்பைகட்டு கட்டி விட்டு தாங்களின் தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டு இடத்தை காலிசெய்துவிட்டார்கள். மக்தும் ஞானியார் தர்ஹா கமிட்டி வேறு வழியில்லாமல் தீர்ப்பில் கையெழுத்துப் போட்டுவிட்டு சென்றார்கள்.
த த ஜ டவுண் கிளையிடம் உள்ள நியாத்தை உணர்ந்த எம்.எம்.ஜே கமிட்டியில் உள்ள ஒரு சில சகோதர்களும், திடல்தொழுகை விசயத்தில் எந்த நியாயமும் இல்லாமல் எம்.எம்.ஜே கமிட்டியினர் மீண்டும் மீண்டும் தேவை இல்லாமல் தலையிடுவதை கண்டு வெறுப்படைந்து இந்த முறை நடந்த விசாரணைக்கு கூட அவர்களுடன் வராமல் அவர்களை புறக்கணித்தை காண முடிந்து. அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.
No comments:
Post a Comment