கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக 07.10.2012 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில், டவுண்கிளை மர்க்கஸில் வைத்து கிளையின் பொதுக்குழு நடைபெற்றது.நெல்லை மாவட்ட செயலாளர் செய்யதலி தலைமையில், துணைச் செயலாளர் அச்சன்புதூர் சுலைமான் மற்றும் மாநில மேலாணமை குழு உறுப்பினர் மௌலவி அப்துன்நாஸர் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் யாவரும் கலந்து கொண்டார்கள்.
பொதுக்குழுவில் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள் .
1. 2012 ன் ரமலான் வரையிலுள்ள வரவு செலவு கணக்குகள் சமர்ப்பிக்கப்பட்டன.
2. 2012 ன் ரமலானில் நோன்பு கஞ்சி மற்றும் பிஃத்ரா வினியோகம் ஆகியாவற்றின் வரவு செலவு கணக்குகள் சமர்ப்பிக்கபட்டன.
3. கடந்த ஒரு வருடகால ஆம்புலன்ஸ் வரவு செலவுகளின் கணக்குகள் சமர்ப்பிக்கபட்டன.
4. வருகிற ஹஜ் பெருநாளில் கூட்டுக் குர்பானிக்காக 6 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டன. அவர்கள் குர்பானிக்கான ஆடு,மாடு பிடிப்பது. அதை முறையாக மக்களுக்கு பங்கீடுவது வரவு செலவுகளை சரிசெய்து கொள்வது இவர்களின் பொறுப்பாகும்.
5. ஆறு பேர் கொண்ட தாஃவா குழு நியமிக்கப்பட்டது. இவர்க்ள தெரு முனை பிரச்சாரத்திற்கு தேவையான பொருள்களை பிரச்சாரம் நடைபெறும் இடத்திற்கு எடுத்துச் செல்வது, தாஃவாவை முடிக்கிவிடுவது அவர்களின் பொறுப்பாகும்.தாயிக்களை ஏற்பாடு செய்வது, காவல்துறையிடம் அனுமதி வாங்கி கொடுப்பது கிளை நிர்வாகிகளின் பொறுப்பாகும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
6. ஆம்புலன்ஸ் 15 கிலோமீட்டர் சென்று வருவதற்கு அதற்கான தொகை எவ்வளவு என்பதை கிளை நிர்வாகிகள் நிர்ணயித்துக்
கொள்ளவேண்டியது. அதே சமயம் 15 கிலோமீட்டருக்கு மேல் ஆம்புலன்ஸ் வெளியூர் சென்று வர கிலோ மீட்டருக்கு 10 (பத்து) ரூபாய் என்று நிர்ணயித்து தீர்மானிக்கப்பட்டது.
7. டவுண் கிளைக்கு வாங்கும் இடம் பற்றி ஆலோசானை செய்யப்பட்டது .
8. நெல்லை மாவட்ட தாமிரபரணி ஆற்றுத் தண்ணீரை கடையநல்லூர் முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்கும் சீராக தண்ணீரை வினியோகம் செய்ய வேண்டும் என்று கடையநல்லூர் நகரட்சியை இப்பொதுக் குழு கேட்டுக் கொள்கிறது.
9. கடையநல்லூர் தெப்ப பகுதியில் மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் வகையிலுள்ள மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பை கூழங்களை உடனடியாக சுத்தம் செய்ய வேண்டு என்று இப்பொதுக்குழு கடையநல்லூர் நகரட்சியை கேட்டுக் கொள்கிறது.
மேலும் கிளைநிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் குறைநிறைகளை பேசி நிவர்த்தி செய்யப்பட்டது. இப்இபாதுக் குழுவிற்கு ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.இறுதியில் மாநிலமேலாண்மைக்குழு உறுப்பினர் மௌலவி அப்துந்நாஸர் அவர்களின் உரையுடன் மதியம் 2 மணியளவில் பொதுக்குழு நிறைவு பெற்றன. அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment