கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Oct 5, 2012

TNTJ பேட்டை கிளையில் நடைபெற்ற அனைத்து கிளைகளின் ஆலோசனை கூட்டம்

04.10.2012 வியாழக்கிழமை அன்று மாலை 4.30 மணி அளவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளை சார்பாக பேட்டை கிளையின் கோரிக்கையை ஏற்று மாவட்ட துணை செயலாளார் சகோதரர் அச்சன்புதூர் சுலைமான் அவர்கள் முன்னிலையில், பேட்டை கிளை தலைவர் சகோதரர் அப்பாஸ் அவர்கள் தலைமையில் அலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

இதில் அனைத்து கிளைகளையும் சார்ந்த நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் கூட்டப்பட்டதன் நோக்கம் பேட்டை கிளை சார்பாக விரைவில் பேட்டையில் மாநில தாயிகளை வைத்து அனைத்து கிளைகளையும் அழைத்து மாபெரும் தர்பியா நடத்துவது அடுத்து பேட்டை கிளை சார்பாக பொதுக்கூட்டம் நடத்துவது அதற்கான செலவுகள் அனைத்தையும் பேட்டை கிளை மட்டும் ஏற்றுக் கொள்வது, இது குறித்து பேட்டை கிளைக்கு தர்பியா மற்றும் பொதுக்கூட்டம் நடத்தி அனுபவம் இல்லாத கரணத்தால் அனைத்து கிளைகளின் அலோசனை கேட்கப்பட்டது முடிவில்
கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்
பட்டது.





01. தர்பியா மற்றும் பொதுக்கூட்டத்தை ஒரே நேரத்தில் நடத்தினால் பல சிரமங்கள் ஏற்படும் மற்றும் பெருநாளாக இருப்பதால் அனைத்து கிளைகளையும் சார்ந்த ஏரளமான வெளிநாட்டு சகோதரர்கள் ஊர்க்கு வர இருப்பதால் அவர்களை முக்கியமாக கவனத்தில் கொண்டு அவர்களுக்கு முன்உரிமை கொடுத்து தர்பியாவை முதலில் நடத்தி விட்டு ஒரு மாத இடைவெளியில் பேட்டை கிளை சார்பாக மாநில தாயிகளை வைத்து மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துவது.

02. இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 04.11.2012 ஞாயிற்றுக்கிழமை அன்று தர்பியாவை நடத்துவது என்றும் இதில் 5 மாநில தாயிகளை குறிப்பிட்டு அதில் மாநில நிர்வாகத்தின் அனுமதிக்கும்  3 தாயிகளை கொண்டு தர்பியாவை நடத்துவது என்றும் 5 மாநில தாயிகளாக  சகோதரர் சம்சுலூஹா ரஹமானி, சகோதரர் M.S.சுலைமான், சகோதரர் அப்துன் நாசர், சகோதரர் பீ.ஜே, சகோதரர் கோவை ரஹ்மத்துலா ஆகிய 5 தாயிகள் பெயரை குறிப்பிட்டு கடிதம் அனுப்புவது என்றும்

03. அனைத்து கிளைகளையும் சார்ந்த வெளிநாட்டு சகோதரர்களுக்கு முன்னுறிமை வழங்குவது என்றும் கிட்டதட்ட 200 சகோதரர்களுக்கு மேல் அழைப்பு கொடுப்பது என்றும் அல்லாஹ்வின் கிருபையால் இந்த ஏற்பாட்டை அனைத்து கிளையின் உதவியால் பேட்டை கிளை சார்பாக சிறப்பாக நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது

கூட்டம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. துவாஆ உடன் நிறைவு பெற்றது, எல்லா புகழும் இறைவனுக்கே.

No comments: