கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Nov 23, 2012

ஆலோசனைக்கூட்டம்!


கடந்த 20.11.2012 செவ்வாய்க்கிழமை அஸர் தொழுகைக்கு பிறகு பேட்டை கிளை சார்பாக அனைத்து கிளை ஆலோசனைக்கூட்டம் பேட்டை கிளை சார்பாக இன்ஷா அல்லாஹ் நடத்தபட இருக்கின்ற பொதுக்கூட்டம் விபரமாக பேட்டை கிளை தலைவர் சகோ. அப்பாஸ் அவர்கள் தலைமையில் டவுண்கிளை அய்யாபுரம் மர்கஸில் வைத்து நடைபெற்றது. இதில் அனைத்து கிளை சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் இதில் கீழ்கண்ட அலோசனை நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

01. முதல் தடவையாக பேட்டை கிளை சார்பாக பொதுக்கூட்டம் நடத்துவதால் அனைத்து கிளைகளும் அனைத்து ஒத்துழைப்பும் நல்குவது


02. போலீஸ் அனுமதி மற்றும் மேடை,அதை சார்ந்த மைக் மற்றும் அனைத்து ஏற்பாடுகளுக்கும் டவுண் கிளை அனைத்து ஒத்துழைப்பு நல்குவது

03. தொண்டரனி மற்றும் விளம்பரம் போன்றவற்றை ரஹ்மானியாபுரம் மரியம் கிளை மற்றும் மக்கா நகர் கிளைகள் பொறுப்பேற்று கொள்வது

04. இன்ஷா அல்லாஹ் பொதுக்கூட்டத்தை மிகவும் சிறப்பாக நடத்துவது அதற்காக அனைத்து கிளை சகோதரர்களும் இப்பொழுது இருந்தே பணிகளை தொடங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது

05. பேட்டை கிளை சார்பாக நடத்தப்படும் பொதுக்கூட்டம் முடிந்து சரியாக மூன்று மாத இடைவெளியில் அடுத்த கிளைகள் அடுத்த பொதுக்கூட்டத்தை போட வேண்டும் என்று தீர்மானித்து அதன்படி டவுண் கிளை தாங்கள் அடுத்து போடுவதாக முன் வந்ததால் அடுத்த பொதுக்கூட்டம் டவுண் கிளை சார்பாக என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

இறுதியில் தூவாவுடன் கூட்டம் இனிதே நிறைவேறியது.

No comments: