இந்த அத்தியாயத்திலுள்ள முன்னறிவிப்பு என்னவென்றால், அபூலஹபும் அவனது மனைவியும்
நரகத்திற்குச் செல்வார்கள் என்பதின் மூலம் அவர்கள் இருவரும் இஸ்லாத்திற்கு வரமாட்டார்கள்
என்பதுதான்.
அதே போன்று தப்பிக்கவே இயலாது என்று சொல்வதின் மூலம் இவர்களிருவருக்கும் நிரந்தர
நரகம் கிடைக்கும் என்பதுவும் தெளிவாகிறது. பொதுவாக நரகத்திற்குச் செல்லுவான் என்று
சொன்னால் அதில் நிரந்தர நரகமில்லாமல், தற்காலிகமாகக் கூட இருக்கலாம், போதுமான தண்டனை கொடுக்கப்பட்ட பிறகு சுவர்க்கத்திற்குச் செல்லுவான்
என்ற கருத்து இருக்கிறது. ஆனால் அபூலஹபையும் அவனது மனைவியையும் பற்றிப் பேசுகிற இந்த
வசனத்தில் مَا أَغْنَى عَنْهُ
- மா அஃனா அன்ஹு என்றுள்ளது. அதற்குப் பொருள் அவர்களால் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவே
இயலாது என்றாகிவிடும்.
அவர்களிருவருக்கும் நிரந்தர நரகம்தான் என்றாகிவிடும்.இந்த இருவருக்கும் நிரந்தர நரகம்தான் கிடைக்கும் என்ற செய்தியை நபிகள் நாயகத்தின்
மூலமாகத்தான் அல்லாஹ் சொல்லுகிறான்.
அதாவது நபிகள் நாயகம்தான் இந்த வசனத்தை தனது பெரிய தந்தை அபூலஹபிற்கும் தனது பெரிய
தாயார் அபூலஹபின் மனைவிக்கும் எதிராகச் சொல்லுகிறார்கள்.இந்த இடத்தில்தான் நாம் அல்லாஹ்வினுடைய முன்னறிவிப்பை நன்றாகப்புரிய வேண்டும். அபூலஹப் என்பவன் நபிகள் நாயகத்திற்கும் இஸ்லாத்திற்கும் மிகப்பெரிய
எதிரியாக இருந்தான். இஸ்லாத்தை எப்படியாவது பொய்ப்படுத்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக்
கொண்டு திரிந்தான். அதற்காக எந்த விலையும் கொடுப்பதற்குத் தயாரான ஒரு நபர்தான்.இந்த நிலையில் முஹம்மது நபியைப் பொய்ப்படுத்துவதற்கு வேறு வெளியிலிருந்து ஆதாரங்களைத்
தேடுவதை விட, அவர் கையை வைத்தே அவரது
கண்ணைக் குத்திவிடலாம். முனாஃபிக்குகள் வெறுமனே பெயருக்காவது இஸ்லாத்தை ஏற்பதைப் போன்று
நடித்தார்கள். உலக மக்கள் பார்வையில் அவர்கள் முஸ்லி-ம்கள் பட்டிய-லில் அடங்கினார்கள்.அது போல் இவனும் செய்திருக்கலாம். நபியவர்களுக்கும் அவர்களுடன் இருந்தவர்களுக்கும்
தெரிகிற மாதிரி அஷ்ஹது அன் லாயிலாஹ இல்லல்லாஹ் என்றுகூறி இஸ்லாத்தை ஏற்பதாகக் கூறுவதன்
மூலம் குர்ஆனை பொய்ப்படுத்தியிருக்கலாம். ஏன் அப்படியொரு நிகழ்வே நடக்கவில்லை.
எதிர்ப்பதற்கு எத்தனையோ சூழ்ச்சி செய்தவர்கள்,
எதாவது ஒரு வழியில் முஹம்மது பொய்யர் என்பதையும், அவர் வஹீ என்று பேசுகிற இந்தக் குர்ஆன் பொய்யானது என்றும், அவர் அல்லாஹ் என்று சொல்லுகிற கடவுளின்வார்த்தையைப் பொய்ப்பித்து அல்லாஹ்வையும் பொய்ப்பிக்கலாம் என்று சுற்றித் திரிந்த
அந்த சமூகத்திற்கு இப்படியொரு விசயம் மனதில்கூட உதிக்கவில்லை என்றால் இது இறைவனால்
ஏற்படுத்தப்பட்ட முன்னறிவிப்புத்தான் என்பதில் எள் முனையளவுக்கும் சந்தேகமே இல்லை.
அதாவது, முஹம்மதாகிய நீர், குர்ஆன் என்பது அல்லாஹ்விடமிருந்து வந்த செய்தி என்று சொல்கிறீர். அல்லாஹ்விடமிருந்து வந்த செய்தி பொய்யாக இருக்காது. ஆனால் அபூலஹபும் அவனது மனைவியும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதின் மூலம், உமக்கு இந்தக் குர்ஆன்
அல்லாஹ்விடமிருந்து வந்தது என்று சொன்னது பொய். நீரும் பொய்யர். குர்ஆன் என்று நீர்
சொல்லுவதும் கற்பனைதான் என்று அவர்கள் வாதிட்டிருக்க முடியும். இஸ்லாத்தையும் அதனை
உருவாக்கியவனாகிய அல்லாஹ்வையும் பொய்ப்படுத்தியிருக்க
முடியும். ஆனால் அது நடக்கவே இல்லை. முஸ்-லிம் என்று சொல்-லிக் கொண்டு எத்தனையோ முனாஃபிக்குகள் இருந்தார்கள். மதினாவிற்கு ஹிஜ்ரத்
செய்யும்போது கூட, எத்தனையோ பேர் நடிக்கத்தான்
செய்தார்கள். நபிகள் நாயகத்தினால் கண்டுபிடிக்க
முடியவில்லை.
எனவே நபியையும், குர்ஆனையும் பொய்பிப்பதற்கு
எப்படியாவது எதிர்க்க வேண்டும் என்று வழிதேடிக் கொண்டிருந்த சமூகம் இந்த வசனத்திற்கு
எதிராக செயல்பட்டு நபியையும் குர்ஆனையும் அல்லாஹ்வையும்
பொய்ப்படுத்த வேண்டுமென அபூலஹபும் அவனது மனைவியும் அந்த சமூகமும் நினைக்கவே இல்லை என்கிற
செய்தியை ஆழமாகச் சிந்தித்தால் இது அல்லாஹ்வின் ஆற்றல் என்பதையும், அல்லாஹ் நினைத்தால் உள்ளங்களைப்
புரட்டுவதின் மூலமே மனிதர்களை அவனால் ஆட்சி செலுத்த முடியும் என்பதையும் நன்றாகப் புரிந்து
கொள்ள வேண்டும்.
இந்த அத்தியாயத்தைப் படித்த ஒரு கிறித்துவப் பாதிரியார், இந்த அத்தியாயத்தில் சொல்லப்பட்ட அபூலஹபைப் பற்றியும் அவனது
மனைவியயைப் பற்றியும் குறிப்புக்களை எடுத்துக் கொண்டு சிந்திக்கிறார்.நபிகளாரை எந்தெந்த அடிப்படையிலெல்லாம் எதிர்க்க வேண்டுமோஅந்தந்த அடிப்படையிலெல்லாம் எதிர்த்த அபூலஹபும் அந்த சமூகமும் இப்படியொரு பாதையைத்
தேர்ந்தெடுத்து இஸ்லாத்தைப் பொய்ப்படுத்தாமல் போனது ஏன்? என யோசிக்க ஆரம்பித்துவிட்டார். இதுபோன்ற விசயத்தை எந்தச் சமானிய
மனிதனாலும் முன்னறிவிப்புச் செய்யவே முடியாது என்பதை உணர்கிறார். முஹம்மது அவர்கள்
அல்லாஹ்வின் தூதராக இருந்தால்தான் இப்படிச் சொல்ல முடியும். இந்த வார்த்தை அல்லாஹ்வின் வார்த்தைதான் என்பதையும் உணர்கிறார்.ஒருவரைக் குறிப்பிட்டு இவர் இஸ்லாத்திற்கு வரவே மாட்டார் என்று நபிகள் நாயகம் சொல்லுகிறார்கள்.
அதுவும் அல்லாஹ் சொல்வதாகச் சொல்கிறார்கள். அதுபோன்று அப்படியே நடக்கிறதெனில், முஹம்மது அவர்கள் நம்மைப் போன்ற சாமானிய மனிதராக மட்டும் இல்லை.
அல்லாஹ்வின் தூதராகவும்
இருக்கிறார்கள் என்று ஒப்புக் கொண்டு இஸ்லாத்தை ஏற்று ஹஜ்ஜுக்கும் சென்று வந்துவிட்டார்
அந்தப் பாதிரியார்.
அந்தப் பாதிரியார், தான் எப்படி இஸ்லாத்திற்கு
வந்தார் என்பதைப் பற்றிச் சொல்லும் போது, இந்த வசனம்தான் சிந்திக்கத்
தூண்டி என்னை ஆட்கொண்டுவிட்டது. அதனால்தான் நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன் என்றும்
விவரிக்கிறார்.ஆனால் நம்மைப் பொறுத்தவரை, தப்பத் யதா சூராவில் வரலாற்றுச்
செய்தி மட்டும்தான் இருப்பதாக நாம் நினைக்கிறோம். இதில் என்ன அப்படி இருந்துவிடப் போகிறது
என்றும் நினைக்கிறோம். மேலும் சொல்வதாக இருப்பின்,
அபூலஹப் நாசமாகிவிட்டான், அவனது மனைவியும் நாசமாகிவிடுவாள்
என்றும்தான் இருக்கிறது. இந்த வசனத்தில் எந்த
அறிவுரையும் இல்லை. தொழுங்கள் என்றோ நோன்பு வைய்யுங்கள் என்றோ பொய் சொல்லாதே என்றோ
கோள் சொல்லாதே என்றோ இல்லை. மேலும் மறுமையைப் பற்றி ஒன்றுமில்லை. வெறுமனே ஒரு தனிமனிதனைப்
பற்றிய செய்தி மட்டும்தான் என்று நாம் நினைக்கலாம்.ஆனால் அப்படியெல்லாம் நினைப்பது தவறானதாகும். ஏனெனில் அல்லாஹ்வுடைய கலாமில் ஒருவார்த்தைகூட
வீணானதாக இருக்காது. இருக்கவும் கூடாது. அவன் அர்த்தத்துடன் அங்காங்கே ஆப்பு வைத்து
இருக்கிறான். அவ்வளவுக்கு இந்த அத்தியாயத்தில் விசயம் இருக்கிறது. ஒருவன் சரியாகச்
சிந்தித்தால் அந்த சிந்தனை அவனை இஸ்லாத்திற்குள் கொண்டுவந்துவிடும்.
நான்கு மத்ஹபு என்று சொல்லுபவர்கள் இந்த அத்தியாயத்திற்கு விளக்கம் என்ற பெயரில்
உலகத்தில் உள்ளதைப் பற்றிப் பேசுகின்றனர். புரியாத விளக்கத்தைச் சொல்லி இந்த அத்தியாயத்தின்
அடிப்படையையே தவறாக்கிவிட்டனர். ஆனால் இந்த அத்தியாயத்தைப் படித்துவிட்டு இஸ்லாத்தை
ஏற்றுக் கொண்டு இந்தப் பாதிரியாரைப் போன்று சிந்தித்தால், இந்த அத்தியாயம் இறைவனால் நபியவர்களின் சமுதாயத்தினருக்குக்
கொடுக்கப்பட்ட முன்னறிவிப்பு என்பதைப் புரியலாம்.
மேலும் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபிகள்
நாயகம் உண்மையிலேயே அல்லாஹ்வின் தூதர்தாம் என்பதையும் அவர்களுக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து
அருளப்பட்ட வசனங்கள் இறைவனின் வார்த்தைகள்தாம் என்பதையும் இவ்வத்தியாயம் மெய்ப்படுத்துகிறது.மேலும் அந்தப் பாதிரியார் இப்படிப்பட்ட வார்த்தையையும் வாசக அமைப்பையும் சொல்வதாக இருந்தால் அதுவும் அல்லாஹ்வின் புறத் திலி-ருந்து வந்த வேதம் என்று சொல்லுவதாக இருந்தால், நிச்சயமாக அவர் அல்லாஹ்வினால்
தேர்ந்தெடுக்கப்பட்ட தூதராகத்தான் இருப்பார் என்று நம்பி நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்கு
இந்த அத்தியாயம் ஒன்றே எனக்குப் போதுமானதாக இருக்கிறது என்றும் கூறுகிறார்.
நன்றி : ஆன்லைன் பி ஜே (http://www.onlinepj.com), DEC 2012 தீன்குல பெண்மணி
நன்றி : ஆன்லைன் பி ஜே (http://www.onlinepj.com), DEC 2012 தீன்குல பெண்மணி
No comments:
Post a Comment