கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Dec 14, 2012

இளைஞர்கள் தாவா !

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம்(மரியம் பள்ளி)கிளை சார்பில் 09/12/2012 ஞாயிற்றுக் கிழமை அன்று கிளைத் தலைவர் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் "அழைப்புப்பணி அவசியம்" என்ற தலைப்பில் கிளைத்தலைவர் முகவுரை வழங்கி தொடங்கினார். தொடர்ந்து சகோ.சத்தாம் ஹூஸைன் "அழைப்புப் பணியின் பயன்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் எவ்வாறெல்லாம் இளைஞர்கள் தாவா செய்யலாம் என்றும் படிக்கின்ற இளைஞர்கள் தங்களது கல்வி பாதிக்காத வகையில் எவ்வாறு அழைப்புப்பணி செய்யலாம் என்பது பற்றி விளக்கப்பட்டு சில சகோதரர்கள் தங்கள் பெயர் மற்றும் கைபேசி எண்ணைத் தந்து அதற்காக முன்வந்தார்கள். இன்ஷா அல்லாஹ் இதற்கான மீண்டும் சந்திப்பு தொடரும் என்று கூறி துஆவுடன் கலைந்து சென்றனர்.

 தமிழகத்தில் குறிப்பாக கடையநல்லுரில் முஸ்லிம் இளைஞர்களை விடியல், பாப்புலர், மற்றும் சோசியல் என்று பலமுகங்களில் இயக்கங்கள் கொண்டவர்கள்  ஜிஹாத் என்ற பெயரிலும் இன்னும் எத்தனையோ வழிகேட்டை கூறி வழிகெடுத்து வரும் இதுபோன்ற இயக்கங்களை பற்றி இளைஞர்களிடம் விளக்கி, அவர்களையும் இந்த தவ்ஹீதை சுவசிக்க கூடியவர்களாக மாற்றும் இதுபோன்ற தாவா பணியை  கடையநல்லூரில் உள்ள TNTJ யின்மற்ற கிளைகளும் எடுத்து செல்வார்களா ? என்ற ஏக்கத்தில் உள்ளது கடையநல்லூர் முஸ்லிம் சமுகம்.




No comments: