பேட்டை கிளைக்கு மர்க்கஸ் அமைய இடம் வாங்கும் விசயமாக அமீரக வாழ் த த ஜ சகோதர்களின் ஆலோசனை கூட்டம்!
21/12/2012 அன்று மக்ரிப் பிறகு சகோதரர் சுலைமான் ரூம்பில் வைத்து துபாய் மண்டல செயலர் சகோ S சையத் ஷா நவாஸ் மற்றும் கடையநல்லூர் வாழ் த த ஜ அமீரக பொறுபாளர் சேக் பரீத் முன்னிலையில் கடையநல்லூர் பேட்டை கிளைக்காக மர்க்கஸ் அமைய இடம் வாங்கும் விசயமாக குறிப்பாக பேட்டை பகுதியை சார்ந்த சகோதர்கள் மட்டும் அழைக்கப்பட்டு அவர்களின் ஆலோசனைகளை பெறுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது, இதில் சகோதர்கள் கலந்து கொண்டார்கள், அதிகமான சகோதர்கள் வேலையின் காரணத்தால் கலந்து கொள்ள முடியவில்லை என்பதை நிர்வாகத்திற்கு தெரிவித்து இருந்தார்கள். இதில் துபாய்,அபுதாபி,அஜ்மானில் இருந்து சகோதர்கள் வருகை தந்து இருந்தார்கள்.
சகோ இப்ராஹீம் பள்ளின் அவசியத்தை பற்றி 10 நிமிடம் பேசினார் பிறகு,
வந்த சகோதர்களிடம் எப்படி வசூல் செய்யலாம் யார் யார் வசூலுக்கு போகலாம் என்று ஆலோசனை கேட்கபட்ட்டது.அதன்படி
துபாய் பகுதியில் சகோதர்கள் கூனி லியாகத் அலி, அப்பா ராஜா, சுலைமான், மகபூப் ஆகியோரும்
அபுதாபி பகுதில் மக்கு நைனா,
அஜ்மான் பகுதியில் சகோதர்கள் செய்யது அலி மற்றும் முகைதின் பிச்சை
சார்ஜா பகுதியில் சகோ அசன்
என்று ஒரு மனதாக முடிவு எடுக்க பட்டது மற்ற சோனாபூர்,அல் கூஸ்,சத்வா,ஆகிய பகுதிக்கு நேரில் சென்று அதற்கானவர்களை முடிவு செய்யலாம் என்று முடிவு செய்யபட்டுள்ளது. துஆ உடன் நிறைவு பெற்றது அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment