கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Dec 4, 2012

TNTJ கடையநல்லூர் அனைத்து கிளை பெண்கள் தர்பியா.

கடந்த 02.12.2012 ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் அனைத்து கிளை சார்பாக பெண்கள் தர்பியா என்னும் நல்லொழுக்க பயிற்சி முகாம் ரஹ்மானியாபுரம் மரியம் பள்ளியின் மேல் தளத்தில் வைத்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது, சரியாக காலை 10.10 மணிக்கு மேலாண்மை குழு உறுப்பினர் அப்துன் நாசர் அவர்களின் சிறப்புரையுடன் பயிற்சி முகாம் தொடங்கியது.
இதில் நடைபெறுகின்ற முகாமின் நோக்கம் பற்றியும் இனி செய்ய வேண்டிய தாவா பணிகள் குறித்தும் மிகவும் விரிவாக எடுத்துரைத்தார், அதன் பிறகு காலை 11.15 முதல் 11.45 வரை சகோதரி நிலோபர் அவர்கள் "இறையச்சம்" என்ற தலைப்பில் பெண்கள் அறிந்து கொள்ள வேண்டிய அல்லாஹ்வின் வல்லமை பற்றியும் நரக நெருப்பின் வேதனை பற்றியும் பெண்கள் மத்தியில் எடுத்துரைத்தார்கள்.
அதன் பிறகு 11.45 மணிமுதல் 12.15 மணிவரை அனைத்து கிளை பெண்களின் அறிமுகம் மற்றும் கருத்து பறிமாற்றம் நடைபெற்றது, இதில் அனைத்து கிளை சார்ந்த பெண்கள் தங்கள் பகுதிகளில் எந்த மாதிரியான மார்க்க பிரச்சாரங்கள் செய்யலாம், மற்றும் தங்கள் பகுதிகளில் எந்த மாதிரயான பிரச்சனைகள் உள்ளது என்பதனை தெளிவாக எடுத்து கூறினார்கள் மற்றும் கிட்டதட்ட 15 பெண்கள் தங்கள் வீட்டில் பெண்கள் பயான் நடத்த முன் வந்தார்கள் அல்லாஹ் போதுமானவன்.
12.30 மணி முதல் 12.50 வரை சகோதரி அய்யம்பேட்டை சாமிலா அவர்கள் "என்னை கவர்ந்த இஸ்லாம்" என்ற தலைப்பில் மிகவும் உருக்கமாக தன்னை இஸ்லாம் எவ்வாறு கவர்ந்தது இஸ்லாத்தை ஏற்க பட்ட கஷ்டங்கள் பற்றி எடுத்துரைத்தார்கள், பெண்கள் மிகவும் ஆவலுடன் அறிந்து கொண்டர்கள் கடைசியாக 12.50 முதல் மதியம் 1 மணிவரை சகோதர் அப்துன் நாசர்யின் முடிவுரையுடன் தர்பியா முகாம் இனிதை நிறைவுற்றது.
இந்த நிகழ்ச்சிகான செலவினங்களை அமிரக வாழ் கடையநல்லூர் சகோதரர்கள் ஏற்று இருந்தார்கள். அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நாம் 200 பெண்கள்களுக்கு மட்டும்தான் திட்டம் இட்டு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருந்தோம் ஆனால் அல்லாஹ்வின் கிருபையால் கிட்டதட்ட 280 பெண்களுக்கு மேல் வந்து இருந்தார்கள் மேலும் இந்த நிகழ்ச்சி பெண்களை கொண்டே நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது, இந்த நிகழ்ச்சியை நல்லபடி ஆக்கி தந்த எல்லாம் வல்ல இறைவனுக்கே எல்லா புகழும்.




No comments: