நமது கடையநல்லூரில் பல்வேறு இடங்களில் லாட்ஜ்களில் நமது முஸ்லீம் குடுபங்கள் வசித்து வருகின்றன. பல நூற்றுக்கணக்கான குடுபங்கள் இவ்வாறு கூட்டாக வசித்து வருகின்றன. ஆனால் இவர்களில் 90% மக்களுக்கு இஸ்லாம் என்றால் என்ன, நமது நிலைபாடு என்ன, நமது கடைமைகள் என்ன என்பன போன்ற அடிப்படை கல்வி கூட அறியாத மக்களாக இருக்கின்றார்கள், இப்படிபட்ட மக்கள் மத்தியில் இஸ்லாத்தை அதன் தூய வழியில் எடுத்து கூற வேண்டும், மேலும் இதுதான் மார்க்க பணிகளிலே சிறந்த பணியாக இருக்கும் இவர்களை வென்று எடுக்க வேண்டும்
என்று கடையநல்லூர் பேட்டை கிளை தீர்மானம் நிறைவேற்றி மாதத்துக்கு குறைந்தது ஒரு லாட்ஜியில்லாவது தாவா பணியே செய்வது என்று முடிவு செய்தது.
அதன் அடிப்படையில் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளை சார்பாக கடந்த 30.11.2012 வெள்ளிக்கிழமை அன்று அஸர் தொழுகைக்கு பிறகு பேட்டை மலம்பாட்டை ரோட்டில் உள்ள அரபி லாட்ஜில் வைத்து பெண்களுக்கான பயான் நடைபெற்றது. இதில் சகோதரி அய்யம்பேட்டை சாமிலா அவர்கள் "இஸ்லாம் என்றால் என்ன?" என்ற தலைப்பில் மிகவும் பயன் உள்ள சொற்பொழிவு நிகழ்த்தினார், இதில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தார்கள்.
இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கும் போது அந்த லாட்ஜில் இருந்த கணவர்மார்கள் லாட்ஜிக்கு வெளியே நின்று கொண்டு இருந்த நமது கிளை நிர்வாகிகளிடம் இந்த மாதிரியான நிகழ்ச்சிகளை நீங்கள் இரண்டு,மூன்று ஆண்டுகளுக்கு முன்பை செய்து இருக்க வேண்டும் தயவு செய்து இனி அடிக்கடி வாரத்துக்கு ஒரு முறையாவது இங்கு வந்து எங்களுடைய பெண்களுக்கு நல்ல விசயங்களை எடுத்து கூறுங்கள் என்று கூறினார்கள் இன்ஷா அல்லாஹ் இனி அடிக்கடி இது மாதிரி நிகழ்ச்சி நடத்துவதாக நமது கிளை நிர்வாகிகள் உறுதி கூறினார்கள்.
வல்ல அல்லாஹ் தன்னலமற்ற எம்முடைய மார்க்க மற்றும் சமுதாய பணிகளை அங்கிகரித்து அதற்கான கூலியே மறுமையில் தந்தருள்வானாக...
No comments:
Post a Comment